அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் -மாகாணசபைத் தேர்தல்?

அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பர­ப­ரப்­புக்­கள் தீவி­ர­மா­கி­யுள்ள நிலை­யில், அந்­தத் தேர்­த­லுக்கு முன்­னர் மாகா­ண­ச­பைத் தேர்­தலை நடத்த முடி­யுமா? என்று உயர் நீதி­மன்­றத்­தின் கருத்தை அறி­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.

சட்­டமா அதி­பர் ஊடாக கருத்­துக்­கேள் பத்­தி­ரத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, உயர் நீதி­மன்­றத்­தில் இன்று தாக்­கல் செய்­ய­வுள்­ளார்.

எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்­பில் பல சுற்­றுப் பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்­டன. அதில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

கோத்­த­பாய ராஜ­பக்­சவை அரச தலை­வர் வேட்­பா­ள­ராக சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி அறி­வித்­துள்­ளது. இந்த நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் அரச தலை­வர் வேட்­பா­ளர் தனித்து கள­மி­றங்­கு­வதா? இல்லை சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வதா என்­பது தொடர்­பில் எந்­த­வொரு முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­ற­ன­தொரு நிலை­யில் அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் மாகா­ண­ச­பைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈடு­பட்­டுள்­ளார்.

அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் மாகா­ண­ச­பைத் தேர்­தலை புதிய முறை­யிலோ, பழைய முறை­யிலோ நடத்­து­வ­தற்­குச் சாத்­தி­யம் உண்டா என்று உயர் நீதி­மன்­றத்­தின் கருத்­தைக் கேட்­ப­தற்­காக, சட்­டமா அதி­பர் ஊடாக கருத்­துக்­கேள் நகர்த்­தல் பத்­தி­ரம் இன்று தாக்­கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. உயர் நீதி­மன்­றம் எதிர்­வ­ரும் 6ஆம் திக­திக்கு முன்­னர் அதற்­கு­ரிய பதிலை வழங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

உயர் நீதி­மன்­றத்­தின் பதி­லைப் பொறுத்தே தேர்­தல்­கள் ஆணைக்­குழு தனது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிக்­க­வுள்­ளது. இதன் கார­ண­மாக தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் நேற்­றைய கூட்­டத்­தில் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­போ­தும், அரச தலை­வ­ரின் இந்த நகர்­வால் மேற்­படி விட­யம் ஆரா­யப்­ப­ட­வில்லை.

You might also like