அரி­ய­வ­கைக் கற்­றா­ழையை கடத்த முயன்­ற­வர்­கள் கைது!!

புற்­று­நோ­யைக் குணப்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டும் மூலி­கைக் கற்­றா­ழை­க­ளு­டன் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மன்­னா­ரில் இருந்து குரு­நா­க­லுக்கு 100க்கும் மேற்­பட்ட கற்­றா­ழை­க­ளைக் கடத்த முயன்­ற­போதே இவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று நண்­ப­கல் மன்­னா­ரில் தள்­ளா­டிக்­கும், வங்­கா­லைக் கிரா­மத்­துக்­கும் இடைப்­பட்ட கற்­றா­ழைப்­பிட்­டி­யில் நடந்­துள்­ளது.

இந்த அரி­ய­வ­கைக் கற்­றா­ளை­கள் கற்­றா­ழைப்­பிட்­டி­யில் உள்­ளன என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தக் கற்­றா­ழை­கள் புற்­று­நோ­யைக் குணப்­ப­டுத்­தும் என்­றும், பல நோய்­க­ளுக்கு நிவா­ரணி என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. இந்த இடம் வங்­காலை பற­வை­கள் சர­ணா­ல­ய­மாக அர­சால் அறி­விக்­கப்­பட்­டும் உள்­ளது.

அந்த இடத்­தி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான கற்­றா­ழை­கள் பிடுக்­கப்­பட்டு கடத்­தில் செல்ல முயன்­ற­போதே அவை பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. பொது­மக்­கள் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யதை அடுத்து பொலி­ஸார் கற்­றா­ழை­களை மீட்­டுள்­ள­னர்.

கற்­றா­ழை­க­ளைக் கொண்டு செல்ல முயன்ற குற்­றச்­சாட்­டில் பொலி­ஸ­ரால் 4 பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் தாம் கூலிக்கு வேலை செய்­வோர் என்­றும், குரு­நா­க­லில் உள்­ள­வரே கற்­றா­ழை­யைப் பிடுங்­கி­னார் என்­றும் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close