side Add

இது­வும் எமது தலை­வி­தி­தானா?

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் நிர்­வா­கப் பரப்­புக்­குள் காணப்­ப­டும் கழிவு நீர் வழிந்­தோ­டும் வடி­கால்­க­ளைச் சுத்­தப்­ப­டுத்தி உரி­ய­மு­றை­யில் பேணும் நட­வ­டிக்­கை­கள் முன்­னைய மாந­க­ர­சபை நிர்­வா­கத் தரப்­பின் காலத்­தில் ஏனோ தானோ என்ற விதத்­தி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தமை கண்­கூடு. காலத்­துக்­குக் காலம் வடி­கால்­க­ளால் ஏற்­ப­டும் பின்­ன­டை­வு­கள், சிர­மங்­கள் குறித்து நக­ரின் வரி­யி­றுப்­பா­ளர்­கள் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்ட முறைப்­பா­டு­கள் காலம் தாழ்த்­தியே கவ­னித்து நேர்­சீர் செய்­யப்­பட்­டன.

யாழ்ப்­பாண மாந­க­ர­ச­பை­யின் தற்­போ­தைய புதிய நிர்­வா­கத்­தில் நக­ரத்­தின் வரி­யி­றுப்­பா­ளர்­கள் எதிர்­நோக்­கும் சிர­மங்­க­ளுக்கு உட­னுக்­கு­டன் தீர்வு காணப்­ப­டு­மென எம் மத்­தி­யில் நில­விய எதிர்­பார்ப்பு மீண்­டும் ‘‘பழைய குருடி கத­வைத் திற­வடி’’ என்ற நிலை­யி­லேயே தொடர்­வது வருத்­தத்­துக்கு உரி­யது.
யாழ்ப்­பா­ணம் கஸ்­தூ­ரி­யார் வீதி­யில் பழைய வின்­சர் தியேட்­ட­ருக்கு எதிர்ப்­புற வரி­சை­யில் அமைந்­துள்ள கழிவு நீர் வழிந்­தோ­டும் வடி­கால் அரு­கி­லுள்ள பிர­தான நாற்­சந்­தியை ஊட­றுக்­கும் இடத்­தில் அடிக்­கடி கழி­வு­கள் அடைப்­ப­தால் தடைப்­ப­டு­வ­தன் கார­ண­மாக அடிக்­கடி கழிவு நீர் ஓட இய­லாது தடைப்­ப­டு­கி­றது.

அதன் பயன், குறித்த வடி­கா­லின் கழிவு நீர் வடி­காலை மேவிப் பாய்ந்து முன்­னால் உள்ள போக்­கு­வ­ரத்து முக்­கி­யத்­து­வம் மிக்க கஸ்­தூ­ரி­யார் வீதி­யில் தேங்கி நிற்­கி­றது. வீதி­யின் அரு­கில் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் பணி­பு­ரி­வோர், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வந்­து­போ­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் பாத­சா­ரி­கள் என்­போர் இந்­தக் கழிவு நீரி­னால் ஏற்­ப­டும் துர்­நாற்­றத்­தைத் தாங்­கிக்­கொள்ள இய­லாது மூக்­கைப் பொத்­திக் கொண்டு செயற்­பட நேர்­கி­றது.

அடிக்­கடி இடம்­பெ­றும் இத்­த­கைய சீர்­கேடு குறித்து பல தட­வை­கள் யாழ்ப்பாணம் மாந­க­ர­சபை நிர்­வா­கத்­தின் பொறுப்­புள்ள தரப்­பி­னர்­க­ளது கவ­னத்­துக்கு நாம் தெரி­யப்­ப­டுத்­திய போதி­லும், வடி­கா­லில் பாயும் கழிவு நீர் தடைப்­ப­டு­மி­டத்தை நேர்­சீர் செய்ய, குறித்த வீதிக்­குப் பொறுப்­பான வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னர் அனு­மதி வழங்க மறுப்­ப­தாக மாந­க­ர­சபை நிர்­வா­கத் தரப்­பின் பொறுப்­பான அதி­காரி சாக்குப் போக்குக் கூறு­கின்­றார்.
கடந்த இரண்டு நாள்­க­ளாக குறித்த பகு­தி­யில் தேங்கி நிற்­கும் கழி­வு­நீரை அகற்­று­வது தொடர்­பாக வர்த்­த­கத் தரப்­பி­னர்­க­ளா­கிய நாம் யாழ்ப்­பாண வர்த்­தக சங்­கத்­தின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தும் எது­வித நட­வ­டிக்­கை­யை­யும் இது தொடர்­பாக இடம்­பெ­ற­வில்லை.

பயங்­கர தொற்று நோய்­களை ஏற்­ப­டுத்­த­வல்ல இந்த நிலை குறித்து சுற்­றுச் சூழல் பேணு­வ­தற்­குப் பொறுப்­பான தரப்­பி­ன­ரா­வது உட­ன­டிக் கவ­ன­மெ­டுத்து இந்­தப் பின்­ன­டைவை நேர்­சீர் செய்­வார்­களா? வரி­யி­றுப்­பா­ளர்­க­ளது சிர­மத்­தைப் போக்கி உதவ வேண்­டிய யாழ்ப்­பாண மாந­க­ர­சபை நிர்­வா­கம் இது விட­யத்­தில் கவ­னம் செலுத்­துமா?

எஸ்.உத­ய­கு­மார்.
யாழ்ப்பாணம்.

You might also like
X