இத்தாவிலில் அதிகாலை நடந்த சோகம்- இருவர் உயிரிழப்பு!!

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி இத்தாவில் பகுதில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தியும், எதிர் திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே பாரவூர்தியின் சாரதியும், டிப்பர் வாகன சாரதியும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like