இரு தலைக் கொள்ளி எறும்­பா­கச் சம்­பந்­தன்!!

தாம் எப்­போ­தும் ஏமாற்­றப்­ப­டு­கி­றார்­கள் என்றே தமிழ் மக்­கள் உணர்­கின்­றார்­கள் எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அர­சி­யல் பிரி­வி­னது முன்­னாள் செய­லா­ளர் நாய­கம் ஜெப்ரி பெல்ட்­மன் தன்­னைச் சந்­தித்­த­போது அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பா­லும் அதன் வழிப்­ப­டுத்­த­லில் தமிழ் மக்­க­ளா­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் இந்­தத் தடவை ஆட்சி, அதி­கார பீடத்துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும்­கூட அவர்­க­ளால் தமிழ் மக்­கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்­கள் என்­கிற உண்­மை­யையே ஜெப்ரி பெல்ட்­ம­னுக்கு நாசுக்­கா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார் சம்­பந்­தன்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இலங்கை அர­சின் புதிய அர­ச­மைப்பு முயற்­சிக் குழு­வின் தீவிர அங்­கத்­த­வ­ரு­மான ஏப்­ர­காம் சுமந்­தி­ரன் ஜெனி­வா­வில் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தி­ருக்­கும் கருத்­தின் பின்­ன­ணி­யில் சம்­பந்­த­னது கருத்­தை­யும் பொருத்­திப் பார்ப்­பது அவ­சி­ய­மா­னது.

புதிய அர­மைப்­புத் தொடர்­பில் கூடி ஆரா­யப்­பட்ட விட­யங்­கள் அடங்­கிய அறிக்கை அதா­வது நகல் வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது, ஆனால் அதற்கு மேல் இதனை முன்­ந­கர்த்­திச் செல்­லும் அர­சி­யல் விருப்பு யாருக்­கும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் சுமந்­தி­ரன்.

ஆக மொத்­தத்­தில் மைத்­திரி -– ரணில் கூட்டை நம்­பித் தாம் மோசம் போய்­விட்­டோம், ஏமாற்­றப்­பட்­டு­விட்­டோம் என்­ப­தையே சம்­பந்­தன் வேறு வார்த்­தை­க­ளில் கூறி­யி­ருக்­கின்­றார். நம்­பிக்­கை­யை­யும் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­விட்டு அவற்றை நிறை­வேற்­றா­மல் விடு­வது சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்கு ஒன்­றும் புதி­தில்லை. தந்தை செல்வா காலந்­தொட்டு மீண்­டும் மீண்­டும் நிகழ்த்­தப்­ப­டு­வ­து­தான் இது. அதற்­குள் இந்­தத் தடவை சம்­பந்­தன், சுமந்­தி­ரன் ஆகிய இரு­வ­ரும் அகப்­பட்­டுக்­கொண்­டார்­கள். அவ்­வ­ளவே!

அதே­நே­ரத்­தில் சம்­பந்­தன் மற்­றொரு விட­யத்­தை­யும் இந்­தச் சந்­திப்­பில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார். இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற பன்­னாட்டு அழுத்­தம் மேலும் தேவை என்­கி­றார் அவர். இதே அழுத்­தத்­தைப் பன்­னாட்­டுச் சமூ­கம் மட்­டு­மல்­லா­மல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் கொடுக்க முடி­யும். அர­சுக்கு எதி­ராக ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மக்­கள் போராட்­டங்­கள் மூலம் இந்த அழுத்­தத்­தைக் கொடுக்க முடி­யும். ஆனால் கூட்­ட­மைப்பு அத்­த­கைய அழுத்­தங்­க­ளைக் கொடுக்க முன்­வ­ரு­வ­தில்லை.

அண்­மைக் காலங்­க­ளில் மக்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­க­ளுக்­குக்­கூட கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யதே தவிர, அவற்­றுக்­குத் தலைமை தாங்கி அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கத்­தக்க பெரும் போராட்­டங்­கள் எத­னை­யும் நடத்­த­வில்லை. அதற்­குக் கார­ணம், அத்­த­கைய அழுத்­தத்தை தற்­போ­தைய ஆட்­சிக்­குக் கொடுப்­ப­தன் மூலம் மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­னர் ஆட்­சி­யைக் கைப்­பற்றி விடு­வார்­களோ என்­கிற அச்­சம். ஐப்­பசி 26ஆம் நாள் அர­சி­யல் சதிக்­குப் பின்­னால் இந்த விட­யத்­தில் கூட்­ட­மைப்பு இன்­னும் அதிக கவ­ன­மா­கவே இருக்­கின்­றது.

கூட்­ட­மைப்­பின் இந்த இக்­கட்டு நிலை­யைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் ரணில் தலை­மை­யி­லான ஆட்­சி­யா­ளர்­கள் தொடர்ந்­தும் தமி­ழர்­களை ஏமாற்றி வரு­கின்­ற­னர். சம்­பந்­தனோ இந்த ஆட்­சியை பாம்­பென்று அடிக்­க­வும் முடி­யா­மல் பழு­தென்று மிதிக்­க­வும் முடி­யா­மல் திண்­டா­டு­கின்­றார். இரு தலைக் கொள்ளி எறும்­பின் நிலையை ஒத்­தி­ருக்­கி­றது அவ­ரது அர­சி­யல் சூழல். அத­னா­லேயே பன்­னாட்­டுச் சமூ­கத்­தைத் துணைக்கு அழைத்­துக் கொண்டே இருக்­கி­றார் சம்­பந்­தன்.

You might also like