இறுதிப்போரில் தப்பியோடிய தமிழ் மக்களை- சுட்டுக்கொன்றனர் புலிகள்!!

இறு­திப்­போ­ரில் போர்க்­குற்­றங்­க­ளில் படை­யி­னர் ஈடு­ப­ட­வே­யில்லை. பாது­காப்­புத் தேடி இரா­ணு­வம் நின்ற பகு­தி­க­ளுக்­குள் தப்­பி­யோடி வந்த தமிழ் மக்­களை விடு­த­லைப்­பு­லி­களே சுட்­டுக்­கொன்­றார்­கள். இப்­படி இந்­தி­யா­வில் கூறி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச.

இந்­தி­யா­வுக்­குச் சென்­றுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை அங்­குள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தொடர் கேள்­வி­க­ளைக் கேட்டு வரு­கின்­ற­னர். அவற்­றில் போர்க்­குற்­றம் தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

விடு­த­லைப் புலி­க­ளின் பிடி­யில் சிக்­கித் தவித்த தமிழ் மக்­களை மீட்­கும் பணி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ஆம் திக­தி­க­ளில் நிறை­வுக்கு வந்­தது. பன்­னாட்­டுப் போர் விதி­மு­றைகளுக்­க­மை­ யவே நாம் தமிழ் மக்­களை மீட்­டெ­டுத்­தோம். இந்­தியா உள்­பட பல நாடு­கள் தமிழ் மக்­களை மீட்­டெ­டுக்­கும் மனி­தா­பி­மா­னப் போருக்கு உதவி புரிந்­தன.

வன்­னி­யில் விடு­த­லைப் புலி­களை நோக்கி படை­யி­னர் நடத்­திய தாக்­கு­தல்­க­ளில் அவர்­க­ளின் பிடி­யில் இருந்த சில மக்­கள் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். போர் நட­வ­டிக்­கை­யின்­போது இது தவிர்க்க முடி­யாது. ஆனால், தமிழ் மக்­களை மீட்­டெ­டுக்­கும் இந்­தப் போரில் போர்க்­குற்­றங்­க­ளில் படை­யி­னர் ஈடு­ப­ட­வில்லை. பாது­காப்­புத் தேடி இரா­ணு­வம் நின்ற பகு­தி­க­ளுக்­குள் தப்­பி­யோடி வந்த ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­களை விடு­த­லைப்­பு­லி­களே சுட்­டுக்­கொன்­றார்­கள். இது­தான் உண்மை.

உயிர் தப்பி தற்­போது வாழும் அந்­தப் பகுதி மக்­க­ளி­டம் இப்­போ­தும் கேட்­டுப் பாருங்­கள் – அவர்­கள் அப்­போது நடந்த உண்­மை­யைச் சொல்­வார்­கள். விடு­த­லைப்­பு­லி­கள் தங்­களை எப்­ப­டிக் கேவ­ல­மாக நடத்­தி­னார்­கள் என்­பதை அவர்­கள் கூறு­வார்­கள்.

வீடு­க­ளுக்­குள் புகுந்து சிறு­வர், சிறு­மி­க­ளைப் பிடித்து வலுக்­கட்­டா­ய­மாக இயக்­கத்­தில் சேர்த்­தார்­கள் புலி­கள். தமது சொல்­லைக் கேட்­காத போரா­ளி­க­ளைச் சுட்­டுக்­கொன்­றார்­கள். சில­ரைக் காணா­மல் ஆக்­கி­னார்­கள்.

பால­சந்­தி­ரன், இசைப்­பி­ரியா

இறு­திப் போரில் இசைப்­பி­ரி­யா­வை­யும், பாலச்­சந்­தி­ர­னை­யும் இரா­ணு­வம் கைது செய்து சுட்­டுக்­கொன்­ற­மைக்கு எந்­த­வித ஆதா­ர­மும் இல்லை. போலிக் காணொ­லி­க­ளை­யும், ஒளிப்­ப­டங்­க­ளை­யும் வைத்து படை­யி­னர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க வேண்­டாம்.

பிர­பா­க­ர­னின் இளைய மகன் பாலச்­சந்­தி­ரன் சிறு­வன் அல்­லர். அவர் ஒரு போராளி. அவ­ருக்கு 5 மெய்ப்­பா­து­கா­வ­லர்­களை பிர­பா­க­ரன் வழங்­கி­யி­ருந்­தார். அதே­வேளை, இசைப்­பி­ரி­யா­வும் ஆயு­தம் தூக்­கிய ஒரு போராளி. அவ­ருக்கு புலி­கள் அமைப்­பி­னர் சூட்­டிய பெயர்­தான் இசைப்­பி­ரியா.

இறு­திப் போரில் இரா­ணு­வத்­தி­டம் சர­ண­டைந்த புலி­கள் அமைப்­பின் 12 ஆயி­ரத்து 500 போரா­ளி­களை புனர்­வாழ்­வ­ளித்து நாம் விடு­தலை செய்­தோம். இப்­ப­டிச் செய்த எம் மீதும் எமது படை­யி­னர் மீதும் சில பன்­னாட்டு அமைப்­பு­க­ளும், சில நாடு­க­ளும் போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வது நியா­யமா?

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் புலம்­பெ­யர் புலி­கள் அமைப்­பு­க­ளின் நிகழ்ச்சி நிர­லின் அடிப்­ப­டை­யில் நிறை­வேற்­றப் பட்­டன. எம்­மைப் பழி­தீர்க்­கும் வகை­யில் புலி­கள் அமைப்­பு­கள் தயா­ரித்த இந்த நிகழ்ச்சி நிர­லுக்கு சில பன்­னாட்டு அமைப்­பு­க­ளும், சில நாடு­க­ளும் ஒத்­து­ழைத்­த­மையை நினைக்­கும்­போது கவ­லை­யாக உள்­ளது. ஆனால், இந்­தத் தீர்­மா­னங்­களை வைத்து எமது படை­யி­னரை எவ­ரும் தண்­டிக்க முடி­யாது. இதற்கு நாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்­க­ மாட்டோம்- என்றார்.

You might also like