இலங்­கை­யு­டன் கூட்டு அமைக்க ஆவ­லோ­டுள்ள அமெ­ரிக்கா

இலங்­கை­யு­டன் பல­மான கூட்டு ஒன்­றைக் கட்­டி­யெ­ழுப்­பு­தற்கு எதிர்ப்­பார்த்­துள்­ளோம் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்டை முன்­னிட்டு இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளம் வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ளது. அந்த வாழ்த்­துச் செய்­தி­யே­லேயே இந்த விட­ய­மும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இலங்­கை­யும், அமெ­ரிக்­கா­வும் மக்­க­ளுக்­கி­டை­யி­லான பரந்­து­பட்ட கூட்டு, ஜன­நா­ய­கக் கொள்­கை­கள் மீதான அர்ப்­ப­ணிப்பு, நிலை­யான – பாது­காப்­பான இந்தோ – பசு­பிக் அடிப்­ப­டை­யி­லான வலு­வான உற­வு­க­ளைக் கொண்­டுள்­ளன.

இந்­தக் கூட்டு மேலும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வ­தை­யும், எதிர்­வ­ரும் ஆண்­டின் சவால்­க­ளைத் தொடர்ந்து சமா­ளிக்­க­வும் நாங்­கள் எதிர்­பார்க்­கின்­றோம். இலங்கை மக்­க­ளுக்­குப் பாது­காப்­பான செழிப்­பான புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.”- என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

You might also like