இலங்கை அணி வெளி­யே­றி­யது!

ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் ஐந்து தட­வை­கள் கிண்­ணம் வென்ற இலங்கை அணி, இந்த வரு­டத் தொட­ரில் லீக் சுற்­று­டன் நடை­யைக் கட்­டி­யது. ஆப்­கா­னிஸ்­தான், பங்­க­ளா­தேஷ் அணி­க­ளு­டன் பி பிரி­வில் இடம்­பி­டித்­தி­ருந்த இலங்கை அணி குறைந்த பட்­சம் ஆப்­கா­னிஸ்­தா­னை­யே­னும் வீழ்த்த முடி­யா­மல் துய­ரத்­து­டன் தாய­கம் திரும்­பி­யது.

கடந்த 15ஆம் திகதி நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷூக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இலங்கை அணி 137 ஓட்­டங்­க­ளால் மிகப்­பெ­ரும் தோல்­வி­ய­டைந்­தது. இத­னால் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ராக நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் இலங்கை அணி கட்­டா­யம் வெற்­றி­பெற வேண்­டும் என்ற நெருக்­கடி இருந்­தது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற ஆப்­கா­னிஸ்­தான் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது. இதன்­படி அந்த அணி 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 249 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ரக­மட் சா 72 ஓட்­டங்­க­ளை­யும், இன்­ச­னுல்லா 45 ஓட்­டங்­க­ளை­யும், சகிடி 37 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் திசர பெரேரா 5 இலக்­கு­க­ளை­யும், அகில தனஞ்­சய 2 இலக்­கு­க­ளை­யும், மலிங்க, சமீர, ஜெய­சூர்ய மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இலங்கை அணி ஓட்­ட­மெ­தை­யும் பெறாத நிலை­யி­லேயே ஆரம்ப வீரர் குசல் மென்­டிஸை இழந்­தது. இரண்­டா­வது இலக்­குக்­காக தரங்க, தனஞ்­சய டி சில்வா இரு­வ­ரும் இணைந்து 50 ஓட்­டங்­க­ளைப் பகிர்ந்­த­னர்.

அணி 54 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த போது 23 ஓட்­டங்­க­ளு­டன் ரண்­அ­வுட் முறை­யில் வீழ்ந்­தார் தனஞ்­சய. குசல் ஜெனித் பெரே­ராவை வீழ்த்­தி­னார் ரசிட்­கான்.

இலங்­கை­யின் மத்­திய வரி­சை­யும் நிலைக்­க­வில்லை. பத்தே நிமி­டத்­தில் இலங்­கை­யின் பின்­வ­ரிசை பறந்­தது. முடி­வில் 158 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது இலங்கை அணி. 91 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று இலங்­கையை வெளி­யேற்­றி­யது ஆப்­கா­னிஸ்­தான்.

You might also like