ஈழத் தமிழர் மீது கரிசனை!!

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டவர்க ளுக்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரகத்தின் அரசியல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே தற்போது ஆட்சியில் உள்ள நிலையிலேயே தற்போது தனது தேர்தல் அறிக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் ஈழத் தமிழருக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்தம் உரிமைகளை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் பன்னாட்டு நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு, ஈழத்தில் நடைபெற்ற துயரங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் அனைத்து உண்மைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டிட நாடாளுமன்றின் ஒப்புதலுடன் அரசமைப்பில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like