உப்புமாவெளியில் மீனவர் வாடிக்கு தீ வைப்பு!!

முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு, உப்புமாவெளிப் பகுயில் இனந்தெரியோதாரால் மீனவர் வாடி நேற்றிரவு எரிக்கப்பட்டுள்ளது.

பிறிதொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய சிறிய வாடி இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் வகையில், குறித்த வெளிமாவட்ட மீனவரே தீ வைத்திருக்கலாமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

You might also like