side Add

உரிய பொருத்­த­மான மாற்­றுத் திட்­ட­மொன்று அவ­சி­யம்

தீவக மக்­க­ளின் குடி­தண்­ணீர் வழங்­கல் பிர­தே­ச­மாக சாட்டி , மண்­கும்­பான் பிர­தே­சம் இன்­று­வரை இருந்­து­வ­ரு­கி­றது. மண்­கும்­பான் குழாய் மூலம் குடி­தண்­ணீர் பெறும் பிர­தே­ச­மா­க­வும், சாட்டி குழாய் மூல­மும் பவு­சர் மூல­மும் குடி­தண்­ணீர் பெறும் இட­மா­க­வும் உள்­ளன.

சாட்டி பகு­தி­யில் பல கிண­று­கள் உள்­ளன. சாட்டி சித்­தாத்­திரை மாதா ஆல­யத்­தி­லும் ஆலய நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட இடங்­க­ளி­லும் நன்­னீர்க் கிண­று­கள் உள்­ளன. குடி­தண்­ணீர் பெறு­வ­தற்­காக பல கிண­று­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளன.

சில கிண­று­கள் அயல் கிரா­மத்­த­வர்­க­ளால் நேர­டி­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. திரு­நாள் காலங்­க­ளில் ஆல­யக்­கி­ணற்­றைப் பொது­மக்­கள் பயன்­ப­டுத்­தி­னர். முகா­மைத்­து­வம் எது­வும் இல்­லாத நீர் பெறு­கை­யால் ஆல­யத்­தின் அரு­கில் உள்ள கிணறு, வாச­லில் உள்ள கிணறு உட்­பட இந்தப்­பி­ர­தே­சத்­தில் உள்ள பல கிண­று­க­ளின் நீரின் தன்மை மாற்­ற­ம­டைந்து நன்­னீர் உவர் நீராகி வரு­கி­றது.

இந்­தப் பகுதி மக்­கள் பலர் தமது விவ­சாய முயற்­சி­க­ளைக் கூடக் கைவிட்டு விட்­ட­னர். தொடர்ந்து குடி­தண்­ணீர் பாவ­னைக்­காக மேலும் மேலும் நீர் பெறப்­ப­டு­வ­தால் மிகு­திக் கிண­று­க­ளின் நன்­னீர்த் தன்மை பாதிப்பு அடை­யுமா? என்ற அச்­சம் இந்தப் பகுதி மக்­கள் மத்­தி­யில் ஏற்­பட்­டுள்­ளது. இந்த விட­யம் அரச உயர் அதி­கா­ரி­கள் மட்­டம் வரை­யில் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த விட­யம் தொடர்­பாக வேலணை பிர­தேச செய­லா­ளர் நேர­டி­யாக நில­மை­களை ஆராய்ந்து பிர­தே­ச­சபை தவி­சா­ளர், நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் அனை­வ­ர­தும் ஒத்­து­ழைப்­பு­டன் துரி­த­மாக சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­னார்.

நீர் வழங்­க­லில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­கள் கார­ண­மாக, நீர் பெறு­கை­யைக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. பல கிண­று­க­ளின் நீரின் நன்­னீர்த் தன்மை மாற்­ற­ம­டைந்த நிலை­யில் சில கிண­று­க­ளில் மட்­டும் நன்­னீர் பெறக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

தொடர்ந்து குடி­ தண்­ணீரை எடுத்து வந்­தால் விரை­வில் எல்­லாக் கிண­று­க­ளும் உவர்ப்­பா­கி­வி­டுமா? என்­ற­தோர் அச்­சம் இந்­தப் பகுதி மக்­க­ளி­டம் நில­வு­கி­றது. மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள இந்த அச்­சத்­தைப் போக்­கக்­கூ­டிய வகை­யில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­புக்­கள் எது­வும் இது­வ­ரை­யில் வௌியி­டப்­பட்­ட­தாக அறிய முடி­ய­வில்லை. இந்த இடர் நிலை­யி­லும் இந்­தப் பகுதி மக்­கள் தமது பகு­தி­க­ளி­லுள்ள கிண­று­க­ளி­லி­ருந்து குடி­தண்­ணீர் பெறு­வ­தற்கு எவ்­வ­கை­யி­லும் இடை­யூறு செய்­ய­வில்லை.

தொடர்ந்­தும் நீர் பெறு­வ­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள இப்­ப­குதி மக்­க­ளுக்­கும், ஏனைய மக்­க­ளுக்­கும் நீர் பெறு­கைக்­கான மாற்­றுத்­திட்­ட­மொன்றை விரை­வாக செயற்­ப­டுத்த வேண்­டு­மென அந்­தப் பகுதி மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். இந்த விட­யத்­தின் உண்­மைத் தன்­மையை எவர் விரும்­பி­னா­லும் நேர­டி­யாக வந்து பார்க்­க­லாம். உரிய தரப்­பி­னர்­கள் இந்­தப் பிரச்­சி­னைக்­கான உரிய தீர்வை விரை­வா­கப் பெற்­றுத் தரு­வார்­களா?

அ.அன்­ரன் யே­சு­தா­சன்
வேலணை.

You might also like
X