உற­வு­க­ளைத் தேடி நேற்­றுப் போராட்­டம்

முடி­வின்­றித் தொடர்­கின்­றது துய­ரம்

கைய­ளிக்­கப்­பட்­டும், கடத்­தப்­பட்­டும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தமிழ், சிங்­க­ளப் புத்­தாண்டு தின­மான நேற்று வவு­னி­யா­வில் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் பல மாவட்­டங்­க­ளில் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விக்­க­வும், வெளிப்­ப­டுத்­த­வும் வேண்­டும் என்று வலி­யு­றுத்தி அவர்­கள் இந்­தப் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

வவு­னி­யா­வி­லும் அவர்­கள் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அவர்­க­ளின் போராட்­டம் நேற்­று­டன் 785 நாள்­களை எட்­டி­யுள்­ளது. எனி­னும் அவர்­க­ளுக்கு இது­வரை தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

புத்­தாண்டு தின­மான நேற்று அவர்­கள் தமக்கு நீதி வேண்டி கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். வவு­னியா கந்­த­சு­வாமி ஆல­யத்­தில் இருந்து ஊர்­வ­ல­மா­கப் புறப்­பட்ட அவர்­கள் பசார் வீதி­யூ­டா­கச் சென்று வவு­னியா தபால் நிலை­யத்­துக்கு அண்­மை­யில் உள்ள, தொடர் போராட்­டம் நடத்­தப்­ப­டும் கொட்­ட­கைக்­குச் சென்­ற­னர்.

“நாம் போராட்­டத்தை ஆரம்­பித்து மூன்று ஆண்­டு­கள் ஆகின்­றன. எமக்கு இது­வரை நீதி கிடைக்­க­வில்லை. 3 ஆண்­டு­க­ளாக வீதி­யில் கிடக்­கின்­றோம். எமது பிள்­ளை­கள் எமக்­குக் கிடைக்­கும் ஆண்டே எமக்­குப் புத்­தாண்டு.”- என்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் மக்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like