ஊடக சுதந்­தி­ரத்­தில்- இலங்கை முன்­னேற்­ற­ம்!!

2019ஆம் ஆண்­டுக்­கான உல­க­ளா­விய ஊடக சுதந்­திர சுட்டி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதில் இலங்கை ஐந்து இடங்­கள் முன்­னே­றி­யுள்­ளது.
பரிஸை தலை­மை­யி­ட­மா­கக் கொண்ட எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர் அமைப்பு வெளி­யிட்­டுள்ள 180 நாடு­களை உள்­ள­டக்­கிய இந்த ஆண்­டுக்­கான ஊடக சுதந்­திர சுட்­டி­யில், இலங்கை 126 ஆவது இடத்­தில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு 131 ஆவது இடத்­தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு ஐந்து இடங்­கள் முன்­னே­றி­யி­ருக்­கி­றது.

ஊடக சுதந்­திர சுட்­டி­யில் இம்­முறை நோர்வே முத­லி­டத்­தி­லும், அதை­ய­டுத்து பின்­லாந்து, சுவீ­டன், நெதர்­லாந்து, டென்­மார்க் ஆகிய நாடு­க­ளும் உள்­ளன.

கடைசி 180 ஆவது இடத்­தில் துர்க்மெ­னிஸ்­தான் உள்­ளது. அத­னு­டன் கடைசி இடங்­க­ளில் வட­கொ­ரியா, எரித்­ரியா, சீனா, வியட்­னாம் ஆகிய நாடு­கள் உள்­ளன.

You might also like