ஊடக படுகொலைக்கு -ரணில் அரசு உடந்தை- நாடா­ளு­மன்­றத்­தில் சர­வ­ண­ப­வன் எம்.பி. உரை!!

‘2015ஆம் ஆண்­டில் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரிக்க வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், வழக்­குத் தொடு­நர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்க இணங்­கி­விட்டு 2018ஆம் ஆண்டு அத­னைச் செய்­ய­மாட்­டோம் என்று பின்­வாங்­கி­ய­ து­டன் அதன் மூலம் நாட்­டின் சுயா­தீ­னம் பாது­காக்­கப்­பட்­டது என்று சொன்­ன­வர்­கள்­தானே இந்த அரச தரப்­பி­னர்! இத்­த­கை­ய­வர்­க­ளி­டம் இருந்து நீதி எதிர்­பார்ப்­பது ஒரு­வேளை இந்த நாட்டு மக்­க­ளின் முட்­டாள்­த­ன­மான செய­லா­கத்­தான் இருக்­கும் இவ்­வாறு சபை­யில் காட்­ட­மா­கக் கருத்து வெளி­யிட்­டார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம் – கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்.
நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை நடை­பெற்ற வரவு – செல­வுத் திட்­டம் மீதான குழு­நிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே சர­வ­ண­ப­வன் எம்.பி. மேற்­கண்­ட­ வாறு கூறி­னார். அவர் சபை­யில் மேலும் தெரி­வித்­தவை வரு­மாறு:-

‘இந்­தச் சபை­யின் வரு­டாந்த நிதி அறிக்­கை­யின் மீது நடக்­கும் விவா­தங்­க­ளின் போது ஊட­கத்­துறை விவா­தங்­க­ளில் கடந்த 9 ஆண்­டு­க­ளா­கத் தவ­றா­மல் உரை­யாற்றி வரு­கின்­றேன். அதி­லும் குறிப்­பா­கக் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக, அதா­வது இந்த ஆட்­சி­யில் நிதி அறிக்­கை­யின் ஊடக அமைச்சு தொடர்­பான விவா­தத்­தில் தவ­றா­மல் கலந்­து­கொள்­கின்­றேன். ஒரு ஊடக நிறு­வ­னத்தை தலைமை தாங்­கு­ப­வன் என்ற அடிப்­ப­டை­யி­லும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டன் நெருங்­கிப் பழ­கு­ப­வன் என்ற அடிப்­ப­டை­யி­லும் இந்த வாய்ப்­பைத் தவ­ற­வி­டக்­கூ­டாது என்று நினைப்­ப­வன் நான்.

ஆனால், இப்­பொ­ழுது உங்­கள் முன் பேசு­கின்ற இந்த நேரத்­தில், இவ்­வாறு இந்த உய­ரிய சபை­யில் உரை­யாற்­று­வ­தால் பயன் ஏதா­வது உண்டா என்­கிற அங்­க­லாய்ப்பு எழு­கி­றது. இது­போன்ற பெரும்­பான்­மைப் பிடி­வாத அர­சு­க­ளின் சபை­க­ளில் ஏனைய இனங்­க­ளுக்­கும் மதங்­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் நீதி கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­கிற ஆணித்­த­ர­மான உண்மை பெரும் பார­மாக என் ஆன்­மாவை அழுத்­து­கின்­றது. கவ­லை­கொள்ள வைக்­கின்­றது. அதே­நே­ரத்­தில் எமது உணர்­வு­க­ளை­யும் ஆதங்­கங்­க­ளை­யும் பதிவு செய்து வைப்­ப­தற்கு இதை­விட வேறு வழி­யு­மில்லை என்­ப­த­னால் இந்த உரையை இங்கே ஆற்­ற­வேண்­டி­ய­வ­னாக இருக்­கின்­றேன்.

ஊட­கத்­துறை தொடர்­பில்
இரு ஆட்­சி­க­ளும் ஒன்றே
ஊட­கங்­கள் மற்­றும் ஊட­கத்­துறை சார்ந்து என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில், மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்­கும் தற்­போ­தைய ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்­கும் இடை­யில் எந்­த­வே­று­பா­டும் இல்லை என்­பதே கடந்த 4 ஆண்­டு­ளில் கண்ட முடிவு. மகிந்­த­வின் ஆட்­சி­யில் நடந்த ஊடக அடக்­கு­மு­றை­யும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் படு­கொ­லை­யும் ஊடக நிறு­வ­னங்­கள் மீதான தாக்­கு­த­லும் இந்த ஆட்­சி­யில் இல்­லையே என்று நீங்­கள் வரிந்­து­கட்­டிக் கொண்டு வர­லாம்.

ஆனால், அன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் தமது செயல்­கள் மூலம் ஏற்­ப­டுத்­தி­விட்­டுப் போன அச்­சம், பயம், சுய­த­ணிக்கை என்­ப­வற்றை முற்­றாக நீக்­கி­வி­டக்­கூ­டிய சூழலை ஏற்­ப­டுத்­த­தத் தவ­றி­ய­தன் மூலம் அல்­லது அத்­த­கைய சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு இருந்­தும் அதனை முற்­றா­கப் புறக்­க­ணித்­த­தன் மூலம் குற்­ற­வா­ளி­க­ ளைத் தப்­ப­விட்டு அச்­சத்­தை­யும் சுய­த­ணிக்­கை­ யை­யும் தொட­ரச் செய்­த­தன் மூலம் மகிந்த அர­சுக்­கும் ரணில் அர­சுக்­கும் பெரிய வேறு­பா­டு­கள் ஏதும் இருப்­ப­தாக எனக்­குப்­ப­ட­வில்லை.

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் குற்­ற­வா­ளி­க­ளைத் தப்­ப­வி­டும் போக்கு (999) குறித்­தும் பன்­னாட்டு அள­வில் பெரு­மெ­டுப்­பில் பேசப்­பட்­டது. இத்­த­கைய போக்கை மனித உரிமை அமைப்­புக்­கள் கடு­மை­யா­கக் கண்­டித்­தன. ஆட்சி மாற்­றத்­தின் போதும் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளால் அதி­க­ள­வில் பேசப்­பட்­ட­வி­ட­ய­மா­க­வும் இது இருந்­தது.

ஆனால், ஆட்­சி­யைப் பிடித்த கடந்த 4 ஆண்­டு­க­ளில் நீங்­கள் என்ன செய்­தீர்­கள்? ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைப் படு­கொலை செய்த, ஊடக நிறு­வ­னங்­க­ ளைத் தாக்­கிச் சேதப்­ப­டுத்­திய ஒரே­யொரு குற்­ற­வா­ளி­யை­யா­வது கண்­டு­பி­டித்­தீர்­களா? அதற்­கான உண்­மை­யான முயற்­சி­க­ளா­க­வது எடுக்­கப்­பட்­டதா?

ஊட­கப்­ப­டு­கொலை தொடர்­பான
விசா­ர­ணை­கள் எதுவும் இல்லை!
கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று நான் கடந்த 4 ஆண்­டு­க­ளாக இந்­தச் சபை­யில் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றேன். கண்­து­டைப்­பாக லசந்த விக்­கி­ர­ம­துங்க மற்­றும் பிர­கீத் எக்­னெ­லி­கொட ஆகி­யோ­ரின் வழக்­கு­களை மட்­டும் விசா­ரி க்­கா­தீர்­கள் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான நிம­ல­ரா­ஜன், சிவ­ராம், நடே­சன், ‘உத­யன்’ பத்­தி­ரி­கை­யின் ஊட­கப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் கொலை­கள் குறித்­தும் விசா­ர­ணை­கள் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று மீண்­டும் மீண்­டும் கத­றி­யி­ருக்­கி­றோம்.

ஆனால், ஆட்­சி­யா­ளர்­க­ளா­கிய நீங்­கள் அதற்­குக் கொஞ்­ச­மா­வது செவி­சாய்­தி­ருக்­கி­றீர்­களா? கண்­து­டைப்­புக்­கா­கக்­கூட உங்­க­ளால் ஒரு தமிழ் ஊட­க­வி­ய­லா­ள­ரின் கொலை குறித்த விசா­ர­ணையை நடத்த முடி­ய­வில்லை என்­றால் நீங்­கள் கொலை­யா­ளி­க­ளுக் உடந்­தை­யா­ன­வர்­கள், கொலை­கா­ரக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­ட­வர்­கள் என்­று­தானே அர்த்­தம்.

பெரும் பன்­னாட்­டுத் தொடர்­பு­டைய போதைப்­பொ­ருள் வர்த்­த­கர்­களை, அர­சி­யல்­வா­தி­க­ளின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக விளங்­கிய பாதாள உல­கக் குழு­வி­னரை நாட்­டின் அரச தலை­வ­ரைக் கொலை­செய்­யச் சதி செய்­த­வர்­கள் எனக் கரு­தப்­ப­டு­ப­வர்­க­ளை­யெல்­லாம் இந்த நாட்­டின் பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கண்­டு­பி­டித்து வைத்­துள்­ள­னர்.

இப்­ப­டி­யான ஆற்­றல் கொண்­ட­வர்­க­ளால் ஏன் ஊட­கங்­க­ளுக்­கும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் எதி­ரான வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது­செய்ய முடி­ய­வில்லை? அது முடி­யா­ம­ லில்லை. அதற்­கான அர­சி­யல் விருப்பு இல்லை என்­ப­தா­லேயே இந்த நிலமை.

2015 ஆட்­சி­மாற்­றத்­தால்
ஏமாற்­றமே எஞ்­சி­யது
2015ஆம் ஆட்சி மாற்­றத்­து­டன் இந்த நிலை­மை­கள் அனைத்­தும் மாறும் என்று எதிர்­பார்த்­தோம். அது சாதா­ரண எதிர்­பார்ப்­பல்ல. மிகப் பெரும் எதிர்­பார்ப்பு. ஏனெ­னில் ‘ஊடக சுதந்­தி­ரம்’ என்­ப­தும் ஊடக அடக்­கு­மு­றை­க­ளுக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ ளுக்­கும் எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்­கும் நீதி வழங்­கப்­ப­டும் என்­ப­தும் ஆட்சி மாற்­றத்­துக்­கான முக்­கிய தேவை­க­ளில் ஒன்­றாக முன்­வை க்­கப்­பட்­டது.

எனவே, பெரு மாற்­றம் ஒன்று நிக­ழும் என்­கிற எதிர்­பார்ப்பு இந்த உல­கத்­திற்கு இருந்­தது போன்றே தமிழ், முஸ்­லிம் மக்­க­ளுக்­கும் குறைந்­த­பட்­சம் குறிப் பிட்ட எண்­ணிக்­கை­யி­லான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் இருந்­தது. துர­திர்ஸ்­ட­ வ­ச­மாக அந்த எதிர்­பார்ப்­பு­கள் அனைத்­தும் பொய்­யா­கிப்­போய், சிங்­க­ளத் தலை­வர்­கள் ஏமாற்­றி­வி­டு­வார்­கள் என்று உறு­தி­யாக நம்­பிய ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சில­ரின் கூற்றே இன்று மெய்ப்­பட்டு நிற்­கின்­றது.

அர­ச­ த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இணைந்த புதிய ஆட்சி பத­விக்கு வரும்­போது ‘சுதந்­தி­ர­மான ஊட­கத்­துறை’ என்­பதை முன்­மொ­ழிந்­தி­ ருந்­தார்­கள். சுதந்­தி­ர­மான ஊட­கத்­துறை என்­பது வெறு­மனே ஊட­கங்­கள் மீதான பௌதிக வன்­மு­றை­களை நிகழ்த்­தா­மல் விடு­வதை மட்­டும் குறிப்­ப­ தல்ல. அதை­யும் தாண்டி சமூ­கத்­திற்­கும், மக்­க­ளுக்­கும் தேவை­யான தக­வல்­க­ளைக் கட்­டுப்­பா­டற்ற விதத்­தில் கொடுப்­ப­தையே குறிக்­கும்.
ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைக் கொன்­ற­வர்­க­ளும் ஊடக நிறு­வ­னங்­க­ளைத் தாக்­கி­ய­வர்­க­ளும் சமூ­கத்­தில் இன்­றும் சுதந்­தி­ர­மாக நட­மா­டி­வ­ரும் நிலை­யில், அச்­ச­மின்றி, சுய­த­ணிக்கை இன்றி, தக­வல்­களை வெளி­யி­டும் சுதந்­தி­ரம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இருக்­கின்­றது என்று இந்த ஆட்சி எதிர்­பார்க்­கி­றதா?

நான் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் நிலைமை பற்றி மட்­டும் இங்கு பேச­வில்லை. சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ஒட்­டு­மொத்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் நிலமை பற்­றி­யும்­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றேன்.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைக் கொன்­ற­வர்­க­ளை­யும் ஊடக நிறு­வ­னங்­க­ளைத் தாக்­கி­ய­வர்­க­ளை­யும் நீதி­யின் முன் நிறுத்­து­வோம் என்று கூறித்­தான் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது இந்த ஆட்சி. ஆனால், லசந்­த­வின் கொலை விசா­ர­ணைக்­கும் எக்­னொ­லி­கொ­ட­வின் மறைவு தொடர்­பான விசா­ர­ணைக்­கும் நடந்­தி­ருப்­பது என்ன? குறைந்­த­பட்­சம் சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கா­வது நீதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்­றால், இல்லை. அத­னால்­தான் மகிந்த ஆட்­சிக்­கும் ரணில் ஆட்­சிக்­கும் இடை­யில் எந்­த­வொரு வித்­தி­யா­ச­மும் இல்லை என்­கி­றேன்.

சிறு­பான்மை மக்­க­ளுக்கு
விடி­வென்­பது இல்­லையா
புதிய அர­ச­மைப்பு உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு காணும் விட­யங்­க­ளி ­லும்­கூட இதே­தான் நடந்­தது. நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் பாதிக்­கப்­பட்ட ஊடக நிறு­வ­ன ங்­க­ளுக்­கும் நீதி வழங்க முடி­யாத ஆட்­சி­யா­ளர்­கள் ஊட­கங்­க­ளா­லும் அவற்­றின் செய்தி அறிக்­கை­யி­ட­லா­லும் தாம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றோம் என்று கூச்­ச­லிட்டு அவற்­றைக் கறுப்பு ஊட­கங்­கள் என்று வெறுப்­பைக் காறி உமிழ்­வ­தில் என்ன நியா­யம் இருக்­கின்­றது? எமது தரப்­பி­லி­ருந்­தும் சிலர் ஊட­கங்­க­ளுக்கு எதி­ரான இத்­த­கைய மென் தாக்­கு­த­லுக்கு ஆத­ரவு தரு­கின்­றார்­கள் என்­ப­தும் கவ­லைக்­கு­ரி­யது.

உயிர் அச்­சு­றுத்­தல் ஊட­கப் பணி­யா­ளர்­கள் மீதும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மீதும் இல்­லா­மல் போய்­விட்­ட­தென்­பது ஓர் ஆரோக்­கி­ய­மான விட­யம்­தான். ஆனால் அர­சி­யல் ரீதி­யான, அதி­கா­ர­பூர்­வ­மான கண்­ணுக்­குத் தெரி­யாத ஓர் ஒடுக்­கு­முறை வலை ஊட­கங்­கள் மீது விரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை நான் இங்கு சுட்­டிக்­காட்­டக் கட­மைப்­பட்­டுள்­ளேன். ஊட­கத் சுதந்­தி­ரத்­தைப் பிழை­யான வழி­க­ளில் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற குர­லு­டன் ஊட­க­ங­கள் மீதான ஒரு வித அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­ப­டு­ கின்­றது. எல்லா ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளும் நடு­நிலை நின்று நேர்­மை­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர் என நான் கூற­வ­ர­ வில்லை. சில உள்­நோக்­கங்­க­ளு­டன் சில தரப்­பி­னரை இலக்­கு­வைத்து செயற்­ப­டும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் உள்­ள­னர் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கின்­றேன்.

அப்­ப­டி­யா­ன­வர்­க­ளின் வார்த்­தை­களை வார்த்­தை­க­ளால் மோதுங்­கள், கருத்­துக்­களை கருத்­துக்­க­ளால் மோதுங்­கள். பொய்­களை உண்­மை­க­ளால் மோதுங்­கள். அதை­வி­டுத்து தங்­கள் வார்த்­தை­களை விளங்­கிக் கொள்­ள­மாட்­டா­த­வர்­கள் என்றோ திரி­பு­ப­டுத்­து­ கி­றார்­கள் என்றோ வசை­பா­டு­வ­தும் ஒரு வித­மான ஒடுக்­கு­மு­றை­தான். அதி­லும் அதி­கார அர­சி­யல்­வா­தி­க­ளின் இத்­த­கைய மிரட்­டல்­க­ளும் ஒரு­வித வன்­மு­றை­தான்.

தெற்­கைச் சேர்ந்த சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நேர்ந்த கொடு­மை­க­ளுக்கே நீதி கிடைக்­க­வில்லை என்­றால் இந்த நாட்­டில் தமி­ழர் உள்­ளிட்ட சிறு­பான்மை இன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் நிலை­மை­யைச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை. மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளை­யும்­விட ஒப்­பீட்­ட­ள­வில் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களே அதி­கம் கொல்­லப்­பட்­டும் பாதிக்­கப்­பட்­டும் இருக்­கி­றார்­கள்.

அதி­லும் வடக்கு, கிழக்­கைச் சேர்ந்த தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களே அதி­கம் பாதிக்­கப்­பட்­டார்­கள். நிம­ல­ரா­ஜன், தராக்கி சிவ­ராம், நடே­சன், சுகிர்­த­ரா­ ஜன், உத­யன் பத்­தி­ரிகை ஊழி­யர்­கள் இரு­வர் என்று கொல்­லப்­பட்ட தமி­ழர்­க­ளின் பட்­டி­யல் நீள­மா­னது. மேலும் பலர் கடத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், உயி­ரைக் காத்­துக்­கொள்­வ­தற்­காக வெளி­நா­டு­க­ளுக்­குத் தப்­பி­யோட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி ­ருக்­கி­றார்­கள். இன்­னும் பலர் தமது தொழி­லில் இருந்து ஒதுங்கி தமக்­குப் பிடிக்­காத வாழ்க்கை ஒன்றை வாழும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளில் ஒரு­வ­ருக்­குக்­கூட இந்த ஆட்­சி­யி­லும் நீதி கிடைக்­க­வில்லை.

படை­யி­ன­ரைக் காப்­பாற்­றத்­தான்
இந்த ஆட்சி மௌனிக்­கி­றதா!
2001ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரை­யில் வடக்­கில் இருந்து வெளி­யா­கும் ‘உத­யன்’ பத்­தி­ரிகை நிறு­வ­ன­மும் அதன் ஆசி­ரி­யர்­கள், பணி­யா­ளர்­க­ளும் 30 தாக்­கு­தல்­கள், மிரட்­டல்­கள், அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவற்­றில் 5 பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். மேலும் இரு­வர் மீது கொலை முயற்சி நடந்­தி­ருக்­கி­றது. உத­ய­னின் ஆசி­ரி­யர் ஒரு­வர் பட்­டப்­ப­க­லில் கடத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்.
பின்­னர் அவ­ரது கடத்­தல் கைது என்று மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­தச் சம்­ப­வங்­கள் பல­வற்­றி­லும் அரச படை­க­ளுக்­கும் ஒட்­டுப் படை­க­ளுக்­கும் நேர­டி­யான தொடர்பு இருக்­கின்­றது என்று தொடர்ந்து குற்­றஞ்­சாட்­டி­வ­ரு ­கின்­றோம். இரண்டு ஆசி­ரி­யர்­கள் அரச படை­யி­ன­ரால் நேர­டி­யா­கத் தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். ஒரு­வேளை, தமது படை­யி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கத்­தான் இந்­தச் சம்­ப­வங்­க­ளில் ஒன்­றைக்­கூட இந்த ஆட்­சி­யும் விசா­ர­ணைக்கு எடுக்­கா­மல் இருக்­கி­றதோ தெரி­யாது.

லசந்த, எக்­னொ­லி­கொட போன்­றோ­ரின் வழக்­கு­களை மீள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­ட­து­கூட பன்­னாட்­டுச் சமூ­கத்­தைச் சமா­ளிக்­கத்­தானே தவிர உண்­மை­யான நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அல்ல என்­பது இப்­போது வெளிச்­ச­மா­கி­விட்­டது. 2017 டிசெம்­பர் மாதம் கொழும்பு தாஜ்­ச­முத்­திரா நட்­சத்­திர விடு­தி­யில் ஒரு பன்­னாட்டு மாநாடு நடத்­தி­னார்­கள்.

அர­சின் ஆத­ரவு, அனு­ச­ர­ணை­யு­டன் இந்த மாநாடு நடத்­தப்­பட்­டது. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ ளைப் புரிந்­தோ­ரைத் தண்­டிக்­காது தப்­ப­வி­டும் போக்கை முடி­வு­றுத்தி சட்­டத்­தின் ஆட்­சியை நிலை­ நி­றுத்­து­ வ­தன் மூலம் வெளி­நாட்­டுச் சுதந்­தி­ ரத்­துக்­கான பிராந்­திய கூட்­டு­றவை வலுப்­ப­டுத்­து­வது என்­கிற தலைப்­பில் இந்த மாநாடு நடந்­தது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­கள் பல­ரும் இந்த மாநட்­டில் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதற்­குப் பின்­னர்­கூட ஊட­க­வி­ய­லா­ளர் கொலை­கள் தொடர்­பில் ஒரு குற்­ற­ வா­ளி­கூ­டக் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­பது இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

உண்­மை­யில் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் நாட்டு மக்­களை ஏமாற்­றி­விட்­டார்­கள். அவர்­க­ளுக்கு உண்­மையை எதிர்­கொள்­வ­தற்­கான திராணி கிடை­யாது. முது­கெ­லும்­பற்­ற­வர்­கள். 2015ஆம் ஆண்­டில் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரிக்க வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், வழக்­குத்­தொ­டு­நர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்க இணங்­கி­விட்டு 2018ஆம் ஆண்டு அத­னைச் செய்­ய­மாட்­டோம் என்று பின்­வாங்­கி­ய­து­டன் அதன் மூலம் நாட்­டின் சுயா­தீ­னம் பாது­காக்­கப்­பட்­டது என்று சொன்­ன­வர்­கள்­தானே இவர்­கள்! இத்­த­கை­ய­வர்­க­ளி­டம் இருந்து நீதி எதிர்­பார்ப்­பது ஒரு­வேளை இந்த நாட்டு மக்­க­ளின் முட்­டாள்­த­ன­மான செய­லா­கத்­தான் இருக்­கும்.

ஆட்­சி­யா­ளர்­கள் மீதான
நம்­பிக்­கையை இழந்­துள்­ள­னர்
தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள்
மகிந்த ஆட்­சிக் காலத்­தில் பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வது தொடர்­பில் ஒரு திட்­டம் அர­சால் அறி­விக்­கப்­பட்­டது. அதற்கு வடக்கு, கிழக்­கில் இருந்து ஒரு தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கூட விண்­ணப்­பிக்­க­ வில்லை என்­ப­தில் இருந்தே இந்த ஆட்­சி­யின் மீது அவர்­கள் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நம்­பிக்கை புலப்­ப­ட­ வில்­லையா?

வடக்கு, கிழக்­கில் உள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­கள்­தான் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். ஆனா­லும், அவர்­கள் இழப்­பீட்­டுக்­காக விண்­ணப்­பிக்க விரும்­ப­ வில்லை. இந்த இழப்­பீட்­டுக்­கான மதிப்­பீ­டு­கள்­கூட கேலிக்­கு­ரி­ய­வை­யா­கவே இருக்­கின்­றன. வடக்கு, கிழக்­கில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அதி­க­ள­வில் பாதிக்ப்­பட்­ட­தற்கு பொலி­ஸார், படை­யி­னர் மற்­றும் அவர்­க­ளோடு சேர்ந்­தி­யங்­கிய தமிழ் ஒட்­டுக்­கு­ழுக்­கள் மீதே குற்­றச்­சாட்­டுக்­கள் இருக்­கின்­றன.

இத்­த­கைய நிலை­யில் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தாம் அச்­சு­றுத்­தப்­பட்­டது குறித்து பொலிஸ் நிலை­யத்­தில் முறை­யிட்­டி­ருந்­தால்­தான் இழப்­பீடு பெற­மு­டி­யும் என்­கி­றார் ஊடக அமைச்­சின் மேல­திக செய­லா­ளர். உல­கம் முழு­வ­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நடை­முறை அது­தா­னாம். அச்­சு­றுத்­தல், அடக்­கு­மு­றை­கள் குறித்­தெல்­லாம் ஆதா­ரங்­கள் இருந்­தால்­தான் இழப்­பீட்­டைப் பெற்­றுக்­கொள்­ள­லா­மாம். இதை­வி­டச் சுத்த கோமா­ளித்­த­னம் வேறு ஏதும் இருக்­க­மு­டி­யாது.

ஊடக அமைச்­சர் இதன் மீது கவ­னம் செலுத்த வேண்­டும். மகிந்த ஆட்­சிக் காலத்­தில் வடக்கு, கிழக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஒரு கொலைக் கள­மா­கவே இருந்­தது, இத­னால் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் பல­ரும் உயி­ரைக் காத்­துக்­கொள்ள தமது பணியை விட்டு ஒதுங்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக இருந்­தார்­கள். மேலும் பலர் தற்­கா­லி­க­மா­க­வே­னும் ஒதுங்­கி­யி­ருந்­தார்­கள். அவர்­க­ளை­யெல்­லாம் உனக்கு அச்­சு­றுத்­தல் இருந்­த­தற்கு ஆதா­ரம் கொண்­டுவா என்று கேட்­பது நியா­ய­மா­னது அல்ல.

எனவே, தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் கொழும்­பி­லி­ருந்­து­கொண்டு ஆட்சி நடத்­தும் அதி­கா­ரி­க­ளின் அணு­கு­முறை சரி­யா­ன­தாக இருக்­க­மு­டி­யாது. வடக்கு, கிழக்­கின் புவி­யி­யல் மற்­றும் அர­சி­யல் நில­வ­ரங்­க­ளைத் தெரிந்த புரிந்த அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த மதிப்­பீட்­டுக் குழுக்­கள் இருந்­தால்­மட்­டுமே இழப்­பீட்டு விட­யம் வெற்­றி­க­ர­மா­ன­தாக அமை­ய­மு­டி­யும் என்­ப­தை­யும் ஊடக அமைச்­ச­ருக்கு இந்­தத் தரு­ணத்­தில் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்­றேன்’ – என்­றார்.

You might also like