side Add

ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பனிக்கானதுவா?

உறு­தி­யாக இல்­லாத ஆரம்­பக் கல்­வி­யா­னது அத்­தி­வா­ரம் இல்­லாத கட்­ட­டத்­தைப் போன்­றது. அதே­போல் ஆரம்­பக் கல்வி திட­மாக இல்­லாத வரை­யில் மாகா­ணத்­தின் கல்­வியை வளர்க்க முடி­யாது. எனவே வடக்­கில் இருந்து சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தின் முன்­பள்­ளி ­கள் அகற்­றப்­பட்டே ஆக­வேண்­டும் என மூத்த கல்­வி­ய­லா­ளர்­கள் கோரு­கின்­ற­னர்.

இலங்­கை­யின் கல்­வித் தரத்­தில் வடக்கு மாகாண கல்­வியே இறுதி இடத்­தில் உள்­ளது. அதி­லும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­கள் மிக­வும் பின்­தங்­கியே உள்­ளன. இதற்கு மாவட்­டக் கல்­வித் தரத்­தில் உள்ள குறை­பா­டு­களே கார­ணம் என நீண்­ட­கா­ல­மா­கவே சுட்­டிக்­காட் டப்­ப­டு கின்­றது.
குறிப்­பாக முன்­பள்­ளி­க­ளில் படைக் கட்­டு­மா­னத் தலை­யீ­டும் இதன் கீழான முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் நிய­ம­ன­மும் இங்கு சுட்­டிக் காட்­டத்­தக்­கன. முன்­பள்­ளி­க­ளில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­று­ப­வர்­க­க­ளுக்கு சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­ப­டும் நிய­ம­ன­மா­ னது ஆசி­ரி­யர் நிய­ம­னமே கிடை­யாது என்று மூத்த கல்­வி­யி­ய­லா­ளர்­கள் தமது தரப்பு நியா­யத்தை எடுத்­தி­யம்­பு­கின்­ற­னர்.

ஊர்­கா­வற்­படை நிய­ம­னத்­தில்
ஆசி­ரி­யர் பணி மேற்­கொள்­வது
தவ­றா­ன­தொரு எடுத்­துக்­காட்டு
சமூ­கப் பாது­காப்புக் குழு என்ற நிய­ம­னத்­தின் அடிப்­ப­டை­யில் அதா­வது ஊர்­கா­வல் படைக்­கு­ரிய நிய­ம­னத்­தின் கீழேயே அவர்­கள் ஆசி­ரி­யர் தொழி­லுக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இங்கே சீரான கல்­வித் தரமே பேணப்­ப­ட­வில்லை. ஊர்­கா­வல் படைக்­கு­ரிய நிய­ம­னத்­தின் கீழ் பணி­யாற்­று­ப­வர்­க­ளில் 8ஆம் தரம் சித்­தி­யெய்யா­த­வர்­க­ளும் நூற்­றுக் கணக்­கில் உள்­ள­னர். அவர்­க­ளின் மாதாந்­தக் கொடுப்­ப­னவு 32 ஆயி­ரம் ரூபா. கிளி­நொச்­சி­யில் ஆயி­ரத்து 56 முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் வல­யக் கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் பணி­யாற்­று­கின்­ற­னர். இவர்­க­ளின் கொடுப்­ப­னவு வெறும் 6 ஆயி­ரம் ரூபா மட்­டுமே என்­ப­தும் இங்கு நோக்­கத்­தக்­கது.

ஊதி­யத்தை நம்பி கடன் பெற்­றோம்
அத­னால் பணி நீக்க வேண்­டாம்
முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளாக சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் கடந்த 5 ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­கள் இந்­தச் சர்ச்சை தொடர்­பில் சில கருத்­துக்­க­ளைப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

‘‘எமக்கு தற்­போது 32 ஆயி­ரம் ரூபா ஊதி­ய­மா­கக் கிடைக்­கின்­றது. இதை நம்­பியே நாம் கடன்­க­ளைப் பெற்­றுள்­ளோம். எமது பணி­களை ஜன­வ­ரி­யு­டன் இடை­நி­றுத்­து­மாறு அரச தலை­வர் தெரி­வித்­துள்­ளார் என்று எமக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் எமது குடும்ப நில­மையை கரு­தித்­தில் எடுத்து தொடர்ந்­தும் பணி­யாற்ற அனு­ம­திக்க வேண்­டும். யாழ்ப்­பா­ணத்­தில் 13 முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளும் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 322 பேரும் பணி­யாற்­று­வ­தோடு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 173 பேரும் குறித்த சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தின் கீழ் ஊதி­யம்­பெ­றும் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­று­கின்­றோம். கூட்­ட­மைப்­பி­னர் படை­யி­ன­ரின் கீழ் இயங்­கும் முன்­பள்­ளி­களை நிறுத்­து­மாறு கோரு­கின்­ற­னர். அவ்­வாறு நிறுத்­து­வ­தனை தடுக்­கு­மாறு கோரு­வ­தோடு சிவில் பாது­காப்­புத் திணைக்­க ­ளத்தை இயங்க அனு­ம­திக்க வேண்­டும்’’- என்­ற­னர்.

இவர்­கள் கடந்த 26ஆம் திகதி புதன்­கி­ழமை ஆளு­நர் அலு­வ­ல­கம் முன்­பாக கவ­னீர்ப்பு ஒன்றை மேற்­கொண்­ட­னர். கேள்­விச் செவி­யன் ஊரைக் கெடுத்­தான் என்­னும் நிலை­யி­லேயே அவர்­கள் அந்­தக் கவ­ன­வீர்ப்­பில் கலந்து கொண்­ட­னர். ஏனெ­னில் ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்ட பல­ருக்கு தமது நிய­ம­னத்­தைத் தடுத்­தது யார்?, எவ்­வாறு தடுக்­கப்­பட்­டது? என்­பது தொடர்­பில் போதிய தெளி­வில்லை.

ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நடந்­தது
ஏற்­க­னவே திட்­ட­மிட்ட கவ­ன­வீர்ப்பா?
ஆளு­ந­ரைச் சந்­தித்து தமது கோரிக்கை மனு­வைக் கைய­ளித்த நிலை­யில் ஆளு­நர் ஆசி­ரி­யர்­களை நேரில் சந்­தித்­தார். இதன்­போது சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­களை கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் கொண்­டு­வர வேண்­டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரனே கோரி­னார். அத­னால் சிறி­த­ரன், சுமந்­தி­ரன், மாவை சேனா­தி­ராசா ஆகி­யோ­ரு­டன் பேசுங்­கள் என்று ஆளு­நர் கோரி­னார். எனி­னும், சிறி­த­ர­னு­டன் பேச­மாட்­டோம் என முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­வித்த ஆளு­நர், அரச தலை­வ­ருக்கு உடன் கடி­தம் எழுதி உங்­க­ளைத் தொடர்ந்­தும் பணி­யாற்ற ஏற்­பாடு செய்து தரு­கின்­றேன். அதற்கு கால அவ­கா­சம் வேண்­டும். எனப் பதி­ல­ளித்­தது மட்­டு­மன்றி சிவில் பாது­காப்­புத் திணைக்­கள பணிப்­பா­ள­ரிற்­கும் தற்­கா­லி­க­மாக தொடர்ந்­தும் செயல்­பட அனு­ம­திக்­கு­மாறு அன்று மாலையே கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

ஆளு­ந­ரின் அவ­சர முடிவு
வடக்கு மாகாண ஆளு­நர் எந்த விட­யத்­தி­லும் அவ­ச­ர­மான முடி­வையே மேற்­கொள்­கி­றார் என்று எண்­ணத்­தோன்­று­கி­றது. அதா­வது அரத தலை­வர் தலை­மை­யில் இடம்­பெற்ற வடக்கு கிழக்­குக்­காக அபி­வி­ருத்­திச் செய­ல­ணிக் கலந்­து­ரை­யா­ட­லில் வடக்­கில் படைக் கட்­டு­மா­னத்­தின் கீழ் இயங்­கும் முன்­பள்­ளி­கள் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குத் தவ­றான செய்­தி­யை­யும் வடக்கு மாகாண முன்­பள்ளி நிய­திச் சட்­டத்தை மீறு­வ­தா­க­வும் உள்­ள­த­னால் அவற்­றினை கல்­வித் திணைக்­க­ளத்­தி ­டம் ஒப்­ப­டைத்தே ஆக வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் தெரி­வித்த வேளை­யில் ‘நானே வடக்­கின் காவ­லன்’ என்­னும் தொனி­யில் அதிக கருத்தை முன்­வைத்து அவற்­றினை நிறுத்­தியே ஆக வேண்­டும் என்ற கோரிக்­கையை வடக்கு மாகாண ஆளு­நர் குரேயே அழுத்­த­மாக முன்­வைத்­தார். இருப்­பி­னும் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத் தின் ஏற்­பாட்­டில் அழைத்து வந்த ஆசி­ரி­யர்­கள் முன்­னி­லை­யில் ஆளு­நர் அர­சி­யல் வாதி­யா­க­வும் சிறப்­பா­கவே செயற்­பட்­டார். அதா­வது ‘‘பாலுக்­கும் காவல் பூனைக்­கும் தோழன்’’ என்ற நிலைப்­பாடே அது.

முன்­பள்ளி ஆசி­ரி­யர் நிய­ம­னத்தை
பெற்­ற­வர்­க­ளி­னது நிலை அவ­லம்
வடக்­கில் தற்­போது பல­நூறு முன்­பள்­ளி­கள் உள்­ளன. அவற்­றில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கல்வி அமைச்­சால் அனு­ம­திக்­கப்­பட்ட 6 ஆயி­ரம் ரூபா மட்­டுமே வழங்­கப்­ப­டும் நிலையே உள்­ளது. அதே­நே­ரம் வல­யக் கல்­வித் திணைக்­க­ளங்­க­ளால் நிர்­வ­கிக்­கும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் க.பொ.த உயர்­த­ரம் அல்­லது சாதா­ரண தரத்­தினை முழு­மை­யாக பூர்த்தி செய்து தகமை அடிப்­ப­டை­யில் பயிற்சி அளிக்­கப்­பட்ட நிலை­யில் உள்­ள­னர். இவை எவை­யும் இல்­லாத சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் ஆசி­ரி­யர் எனச் சொல்­லப்­ப­டு­ப­வர்­கள் 32 ஆயி­ரம் ரூபாவை பெறு­வது என்­பது பிரச்­சி­னைக்­கு­ரிய விட­யமே.

இதனை தீர்ப்­ப­தா­னால் இரு வழி­களே உள்ளன. அதா­வது அனைத்து ஆசி­ரி­யர்­க­ளை­யும் கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்­வாங்கி அனை­வ­ருக்­கும் 32 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கப்­பட வேண்­டும். அல்­லது சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தி­ ன­ருக்­கு­ரிய நிய­ம­னப் பணி­களை வழங்கி முன்­பள்­ளி­களை விடு­விக்க வேண்­டும். இதனை அர­சி­யல் ரீதி­யா­கவே தீர்க்க முடி­யும். அதுவே யதார்த்­த­மும்.
சிறி­த­ர­னின் பதில்

இந்த விட­யத்­தில் சிறி­த­ரனே குழப்­பு­கி­றார் என்று சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தி­ ன­ரும் ஆளு­ந­ரும் கூறு­வது தொடர்­பில் சிறி­த­ர­னி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, எந்­த­வொரு முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளை­யும் பணி­யில் இருந்து நிறுத்­து­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோர­வில்லை. மாறாக ஒரு பகு­தி­யி­ன­ருக்கு 32 ஆயி­ர­மும் மறு­த­ரப்­பிற்கு 6 ஆயி­ரம் ரூபா­வும் வழங்­கு­வ­தனை சீர் செய்­யும் நட­வ­டிக்­கை­யையே கோரு­கின்­றோம். வடக்கு மாகா­ணத்­தில் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளம் என்­னும் பெய­ரில் இரா­ணுவ துணைப்­ப­டைக் கண்­டு­மா­னத்­தில் இயங்­கும் முன்­பள்­ளி­களை அகற்றி அவற்­றினை கல்­வித் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறே கோரு­கின்­றோம்.

கிளி­நொச்­சி­யில் தற்­போது பணி­யில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளில் 322 பேர் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளுக்கு மட்­டும் இந்த நாட்­டின் அர­சால் 32 ஆயி­ரம் ரூபா வழங்க முடி­யு­மா­னால் எஞ்­சிய முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஏன் அந்த 32 ஆயி­ரத்தை வழங்க முடி­யாது என்­பதே எமது கேள்வி.

சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளம் 8 வகுப்­பு­ட­னும் வய­துக் கட்­டுப்­பாடு இன்­றி­யும் நிய­ம­னம் செய்த பின்பு பயிற்­சியை வழங்கி பணி­யாற்ற அனு­ம­திக்­க­லாம் எனில் க.பொ.த. உயர்­த­ரம் மற்­றும் சாதா­ரண தரம் சித்தி எய்­திய ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் மட்­டும் 6 ஆயி­ரத்­துக்­கா­கப் பணி­யாற்­று­வது சரி­யா­ன­து­தானா? என்ற கேள்­விக்கு வடக்கு மாகாண ஆளு­நர் பதில் கூற­வேண்­டிய தேவை உள்­ளது.

இன்று இந்த 600 பேரின் நிய­ம­னத்­துக்கு நாம் எதிர்ப்­புக் கூற­வில்லை. ஆனால் வடக்கு மாகா­ணத்­தில் 6 ஆயி­ரம் ரூபா­வு­டன் நிரந்­த­ர­மும் இன்றி, ஓய்­வூ­தி­யமோ அல்­லது ஊழி­யர் சேம­லாப நிதியோ இன்றி பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு ஆளு­நர் கூறும் பதில் என்ன? என சிறி­த­ரன் கேள்வி எழுப்­பி­னார்.

கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளின்
கவ­னத்­தின் கீழ்
வட­மா­கா­ணத்­தில் கல்வி நிலையை இரா­ணுவ மயப்­ப­டுத்­தாது கல்­வி­யா­ளர்­கள் கல்­வி­யை­யும் படைக் கட்­டு­மா­னத்­தி­னர் படைக் கட்­டு­மா­னப் பணி­யி­னை­யுமே மேற்­கொள்ள வேண்­டும். அதி­லும் குறிப்­பாக சில முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் சேராத இடம் சேர்ந்து ஊதி­ யத்­துக்­காக மாவட்­டத்­தின் கல்­வியை விற்க அனு­ம­திக்க முடி­யாது. இவர்­க­ளுக்கு அவர்­க­ளின் ஊதி­யம் முக்­கி­யம். எமக்கு எதிர்­கால சந்­த­தி­யின் கல்வி மட்­டும்­தான் முக்­கி­யம் என்று கல்­வி­யி­ய­லா­ளர்­கள் கருத்­துத் தெரி­விக்­கின்­ற­னர்.

You might also like