side Add

எரி­பொ­ருள்­கள் விலை -நள்­ளி­ர­வு முதல் அதி­க­ரிப்பு

நள்­ளி­ரவு முதல் எரி­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று மாலை நிதி­ய­மைச்­ச­ ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் இடையே நடந்த சந்­திப்­பில் இது தொடர்­பான தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

92 ஒக்­ரோன் பெற்­றோல் லீற்­றர் ஒன்­றின் விலை 8 ரூபா­வா­லும், 95 ஒன்­ரோன் பெற்­றோல் லீற்­றர் ஒன்­றின் விலை 7 ரூபா­வா­லும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. டீசல் லீற்­றர் ஒன்­றின் விலை 9 ரூபா­வா­லும், சுப்­பர் டீல் லீற்­றர் ஒன்­றின் விலை 10 ரூபா­வா­லும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார்.

எரி­பொ­ருள் விலை அதி­க­ரிப்­பது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை அமைச்­ச­ர­வைக்­கூட்­டம் நடந்­தது. எரி­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரிப்பு தொடர்­பான சூத்­தி­ரம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்றை நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர முன்­வைத்­தார்.

எனி­னும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அள­விற்­குத் விலையை அதி­க­ரிக்க முடி­யாது என்று மறுத்த அரச தலை­வர் இது தொடர்­பாக மாலை 4 மணி­ய­ள­வில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­ட­லாம் என்று தெரி­வித்­தார். நேற்­று­மாலை அரச தலை­வ­ரும், நிதி­ய­மைச்­ச­ரும் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். அதில் விலை அதி­க­ரிப்­புத் தொடர்­பில் இறுதி முடிவு எடுக்­கப்­பட்­டது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் எரி­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்று அறி­விக்­கப்­பட்­டது. எனி­னும் மறு­நாள் காலை அந்த அதி­க­ரிப்பு திடீ­ரென இரத்­து­செய்­யப்­பட்டு பழைய விலைக்கே எரி­பொ­ருள் விற்­பனை செய்­யப்­பட்­டது.

You might also like
X