எரிவாயு நிறுவனத்தில் தீ – 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக எரிவாயுக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் உள்ள நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like