எல்லாம் தலைகீழாக மீண்டும் மாறிவிடும்!!

தமி­ழர்­கள் விரும்­பி­னா­லும் விரும்­பா­விட்­டா­லும் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான போட்டி தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றது என்­ப­தைக் கடந்த சில நாள்­க­ளாக வெளி­வ­ரும் செய்­தி­கள் வெட்­ட­வெ­ளிச்­ச­மாக்­கு­கின்­றன. பத­வி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கான போட்­டி­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­க­ளாக வரக்­கூ­டி­ய­வர்­க­ளும் பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ளர்­க­ளா­கக்­கூ­டி­ய­வர்­க­ளும் வாக்­கு­ க­ளைக் கவர்­வ­தற்­கான பணி­க­ளில் மும்­மு­ர­மாக இறங்­கி­யி­ருக்­கி­றார்­கள்.
பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் சார்­பில் கோத்­த­பாய ராஜ­பக்­சவே கள­மி­றங்­கு­வார் என்­பது அனே­க­மாக உறு­தி­யாகி வரு­கின்­றது. பசில் ராஜ­பக்­ச­வின் பெய­ரும் இந்­தப் போட்­டி­யில் அடி­பட்­டா­லும் அவர் போட்­டி­யி­ட­மாட்­டார் என்­பது நேற்­றுத் தெளி­வா­கி­விட்­டது. கோத்­த­பா­யவே போட்­டி­ யி­டப்­போ­கி­றார் என்­கிற நிலை­யில் அவர் கட்­சி­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தற்­கான சந்­திப்­புக்­க­ளை­யும் நடத்­தத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்.

அத்­த­கைய சந்­திப்­புக்­கள் அவ­ரது நிலைப்­பாட்டை மிகத் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் பங்­கா­ளிக் கட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய புளொட் அமைப்­பின் தலை­வர் தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­த­ னு­டன் அவர் நடத்­திய சந்­திப்பு தமி­ழர்­க­ளின் பிரச்­சினை தொடர்­பில் அவர் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நிலைப்­பாட்­டைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக இருந்­தி­ருக்­கி­றது.

இலங்­கை­யில் நில­வு­வது ஒரு பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னையே தவிர இனப் பிரச்­சினை அல்ல என்ற புரி­த­லி­லேயே கோத்­த­ பாய இப்­போ­தும் இருக்­கி­றார். போர்க் காலத்­தி­லும் அவர் இதே நிலைப்­பாட்­டைத்­தான் கொண்­டி­ருந்­தார். நாட்­டைத் துரி­த­மாக அபி­வி­ருத்­திப் பாதை­யில் கொண்டு சென்­று­விட்­டால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் எவை­யும் இருக்­க­மாட்டா என்றே அவர் கரு­து­கின்­றார். அத­னால் புதிய அர­ச­மைப்பு, அர­சி­யல் தீர்வு ஆகிய விட­யங்­கள் குறித்­துப் பெரி­தாக அலட்­டிக்­கொள்­ளும் நிலை­யில் அவர் இல்லை.

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ வது என்­ப­த­ற்கு அப்­பால் தீர்வு குறித்­துச் சிந்­திப்­ப­ தற்­குக்­கூட அவர் தயா­ராக இல்லை. சிங்­க­ள­வ­ர­்க­ளின் வாக்­கு­களை மட்­டும் வைத்­துக்­கொண்டே தான் அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­பெற்று விட­லாம் என்று அவர் கரு­து­வ­த­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குக் கன­தி­யான முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தில் அவ­ருக்கு உடன்­பா­டு­இல்லை என்­ப­தும் வெளிப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை, தாம் மீண்­டும் அதி­கா­ரத்துக்கு வந்­தால் அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்தை நீக்­கி­வி­டப் போவ­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் தெரி­வித்­தி­ருக்­கி­றார். 19ஆவது திருத்­தம் நீக்­கப்­பட்­டால் அரச தலை­வர் பத­விக்கு மீண்­டும் முழு­மை­யான அதி­கா­ரம் திரும்­பக்­கூ­டும். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் தூக்கி வீசப்­ப­டக்­கூ­டும்.

ஆக மொத்­தத்­தில் நாடு மீண்­டும் இருண்ட யுகத்தை நோக்கி முழு வீச்­சில் திரும்­பிப் பய­ணிக்­க­வேண்­டி­யி­ருக்­கும். ஒரு குடும்ப ஆட்சி முறைக்கு எதி­ராக 2015இல் இலங்கை மக்­க­ளில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­கள் ஏற் ப­டுத்­திய மாற்­றம் பொரு­ளற்­ற­தாக்­கப்­பட்டு, அதே குடும்­பத்­தின் ஆட்சி மேலும் வலு­வா­ன­தாக அரங்­கே­றக்­கூ­டும்.
இவ்­வாறு இலங்கை பின் னோக்­கிப் பய­ணிக்­கத் தொடங்­கும்­போது அதில் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளாக தமி­ழர்­கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னரே இருக்­கப்­போ­கின்­றார்­கள். இந்த நிலையை எதிர்­கொள்­வ­தற்­கான தயார்ப்­ப­டுத்­தல்­க­ளோடு தமி­ழர்­கள் இருக்­கின்­றார்­களா என்­பதே இன்று பய­மு­றுத்­தும் கேள்வி.

You might also like