side Add

எவ­ரி­டம் சொல்லி­ அழ முடி­யும்?

தமிழ் மக்­கள் மத்­தி­யில் தற்­போ­தைய சூழ­லில் நல்­ல­தொரு தலை­மைத்­து­வம் இல்­லா­தமை குறித்துப் பலரும் உணர்கின்றனர். தமி­ழர்­க­ளின் ஏக­பி­ர­தி­நி­தி­கள் என முழக்­க­மிட்ட சில அர­சி­யல் (தமிழ்) வாதி­கள், அர­சுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் பாம்­புக்கு வாலும் மீனுக்­குத் தலை­யும் காட்டி வந்த நிலை­யில், தற்­போ­தைய உள்­ளூ­ராட்சி மன்றங்க ளுக்கான தேர்தல் மக்­களை மிக­வும் விழிப்­ப­டைய வைத்­துள்­ளது.

ஔவை­யா­ரின் வரி­க­ளை­யும் மறந்து, மதி­யா­தார் வீட்­டு­வா­ச­லில் போய் நின்று கொண்­டும் தமது செயலை நியா­யப்­ப­டுத்தி மக்­களை முட்­டா­ளாக்­கு­ கின்­ற­ னர். எம்­மில் சிலர் இன்­ன­மும் முட்­டாள்­க­ளாக இருப்­ப­தும் உண்­மையே.

கடந்த (01.04.2018) முட்­டாள்­கள் தினத்­தன்று பிர­தான வீதி ஒன்­றின் ஊடாக துவிச்­சக்­கர வண்­டி­ ஒன்­றில் சென்று கொண்­டி­ருந்­தேன். மதகு ஒன்­றில் இள­மட்­டங்­கள் பத்­துப் பன்­னி­ரண்டு பேர் வரை­யில் நீல நிற மைப் போத்­தல்­க­ளு­டன் ஆளுக்­காள் மீது மை தெளித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

இன்றைய நிலை­யில் இத்­த­கைய சில்­மி­சங்­கள் தேவை­தானா? ஒரு­பு­றம் இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்ள தமது காணி­களை மீட்­ப­தற்­கும், அர­சி­யல் கைதி­கள் விடுப்புக்கும் வரு­டக்­க­ணக்­கில் எமது உற­வு­கள் போரா­டி­வ­ரு­கின்­ற­னர். மறு­பு­றம் போரால் கண­வரை, பிள்­ளை­களை, சொத்­துக்­களை, அவ­ய­வங்­களை இழந்த உற­வு­கள் உடல் உள­ரீ­தி­யா­க­வும் பாதிக்கப்பட்டு ஒரு நேர உண­ விற்கே அவ­லப்­ப­டு­கின்­ற­னர்.

இவர்­க­ளின் துய­ரங்­களைப் போக்கி வைக்க ஆண்­ட­வன்­தான் கருணை புரி­ய­ வேண்­டும். அரச சேவை­யில் உள்ள தவ­று­களை சுட்­டிக்­காட்டி நியா­யம் கேட்­டால் ஒரு­வ­ழி­யில் பழி­வாங்­கல்.
தவ­று­செய்­ப­வர்­க­ளைத் தட்­டிக் கேட்­டால் கேட்­ப­வர் தாக்­கப்­ப­டு­வார்.

எமது சில தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் எப்­படி மதி கெட்டு பய­ணிக்­கின்­ற­னரோ, அதே வழி­யில்தான் எமது இளம் தலை­ மு­றை­யும் பய­ணத்தை தொட­ர­வும் கூடும். இன்­றைய சூழ­லில் தமி­ழர்­க­ளுக்கு என்று நல்­ல­தொரு கட்­டுப்­பாடு உள்ள தலை­வன் இருந்­தால் தலை­வ­னின் பின்­னால் மக்­கள் பய­ணிப்­பர். இதை நடை­மு­றை­யில் நாம் கண்­கூ­டாக கண்­டுள்­ளோம்.

ஆனால் இன்­றைய தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ள்,இளைஞர்கள், திசை­மா­றிப் பய­ணிப்­ப­தை உணர்த்தி அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தி அவர்­க­ளின் தவ­று­க­ளைத் திருத்தச் செய்வார்களா?

அ.அன்பு, வரணி

You might also like
X