ஏற்றுக் கொள்ள முடியாதது- ராகுல் காந்தியின் கருத்து!!

இறு­திப் போரின்­போது இலங்­கை­யில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளுக்­கும் தமது கட்­சிக்­கும் எவ்­வித தொடர்­பு­மில்­லை­யென காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ராகுல் காந்தி கூறி­யதை எவ­ருமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்.

இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது
காங்­கி­ர­ஸின் ஆட்­சியே இருந்­தது
இறு­திப்­போர் இடம்­பெற்றபோது காங்­கி­ரஸ் கட்சி தலை­மை­யி­லான ஆட்­சியே இந்­தி­யா­வில் அதி­கா­ரத்­தைக் கொண்­டி­ருந்­தது. மன்­மோ­கன்­சிங் தலைமை அமைச்­ச­ரா­க­வி­ருந்­தார். வெளி­நாட்­டில் பிறந்­த­வர் என்ற கார­ணத்­தி­னால் அந்­தப் பத­வி­யில் அமர முடி­யாத சோனி­யா­காந்தி காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் என்ற வகை­யில் சகல அதி­கா­ரங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தார். மன்­மோ­கன்­சிங் சோனி­யா­வின் தாளத்­துக்கு ஏற்­பவே ஆடிக்­கொண்­டி­ருந்­தார்.

இந்­தி­யா­வின் முன்­னாள் அரச தலை­வர் பத­வியை வகித்த ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு தற்­கொ­லை­தாரி ஒரு­வ­ரால் படு­கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொலை­யின் பின்­ன­ணி­யில் விடு­த­லைப் புலி­கள் இருந்­த­னர் என்று காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் நம்­பி­னார்­கள். இத­னால் விடு­த­லைப் புலி­க­ளைப் பழிக்­குப்­பழி வாங்க வேண்­டு­மென்ற எண்­ண­மும் அவர்­க­ளி­டம் நிறை­யவே காணப்­பட்­டது. புலி­க­ளைப் பழி­வாங்­கு­வ­தற்கு இறு­திப் போர் நல்­ல­தொரு வாய்ப்­பாக அவர்­க­ளுக்கு அமைந்து விட்­டது.

பேச்­சுக்­கள் மூல­மா­கத் தமது பிரச்­சி­ னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காது என்­பதை உணர்ந்து கொண்ட இலங்­கைத் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்­திப் போரா­டி­னார்­கள். சுமார் 30 ஆண்­டு­கள் நீடித்த போரில் ஏரா­ள­மான உயிர்­கள் காவு கொள்­ளப்­பட்­டன. பெரு­ம­ளவு சொத்­துக்­கள் நாச­மா­கின. அரச படை­கள் வேறொரு நாட்­டு­டன் போரி­டு­வ­தைப் போன்று தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் கண்­மூ­டித் தன­மான வகை­யில் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டன. ஆனால் தமிழ்ப் போரா­ளி­களை மண்­டி­யிட வைக்க முடி­ய­வில்லை.

இந்­திய -– இலங்கை ஒப்­பந்­தத்தை
நிரா­க­ரித்­த­னர் விடு­த­லைப் புலி­கள்
1987ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி இலங்­கைக்கு வந்து அப்­போ­தைய இலங்கை அரச தலை­வ­ரான ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வு­டன் இணைந்து ஒப்­பந்­த­மொன்­றில் கைச்­சாத்­திட்­டார். இது இந்­திய இலங்கை ஒப்­பந்­த­மென அழைக்­கப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் இரண்­டும் இணைக்­கப்­பட்டு இரண்­டுக்­கும் பொது­வான மாகா­ண­சபை ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. இதை அடி­யொற்­றி­ய­தா­கவே ஏனைய மாகா­ணங்­க­ளி­லும் மாகாண சபை­கள் அமைக்­கப்­பட்­டன. இந்­தி­ய–­இ­லங்கை ஒப்­பந்­தத்­தை­யும் மாகாண சபை­யை­யும் விடு­த­லைப் புலி­கள் முற்­றா­கவே நிரா­க­ரித்­த­னர். ஆனால் சில தமிழ்க் குழுக்­கள் இவற்றை ஏற்­றுக்­கொண்­டன.
இந்­தி­ய–­இ­லங்கை ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் அமை­திப்­படை என்ற பெய­ரில் இந்­தி­யப் படை­கள் தமி­ழர் பகு­தி­க­ளில் காலடி எடுத்து வைத்­தன.

ஆனால் புலி­களை அழிப்­ப­தற்­கென ராஜிவ் காந்­தி­யி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­ட­வர்­களே அந்­தப் படை­யி­னர் என்­பது பின்­னர் தெரிய வந்­தது. இந்­தி­ யப்­ப­டை­கள் புலி­க­ளைத் தேடி­ய­ழிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டன. ஆனால் அவர்­க­ளது எண்­ணம் நிறை­வே­ற­ வில்லை. பலத்த உயி­ரி­ழப்­புக்­க­ளைச் சந்­தித்த பின்­னர் தோல்­வி­யு­டன் தாய­கம் திரும்­பிச் செல்­லவே அவற்­றால் முடிந்­தது. பின்­னர் ராஜிவ்­காந்தி கொலை செய்­யப்­பட்­ட­தும். இந்­தக் கொலைக்கு விடு­த­ லைப்­பு­லி­கள் குற்­றம் சாட்­டப்­பட்­ட­தும் அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­யங்­க­ ளா­கும்.

புலி­க­ளின் வலிமை
கொழும்­புக்­குத் தெரி­யும்
தனித்து நின்று போரிட்டு புலி­க­ளைத் தோற்­க­டிக்க முடி­யா­தென்­பதை இலங்கை அரசு நன்­றா­கவே தெரிந்து வைத்­தி­ருந்­தது. இத­னால் பிற நாடு­க­ளின் உத­வியை நாடி­யது. புலி­க­ளின் போராட்­டத்­துக்கு பயங்­க­ர­வாத முத்­தி­ரை­யும் குத்­தப்­பட்­டது. இத­னால் அமெ­ரிக்கா உட்­பட்ட சில நாடு­கள் இலங்­கைக்கு உத­வு­வ­தற்கு முன்­வந்­தன. இந்­தியா முழு அள­வில் உத­வி­களை வழங்­கி­யது. இறு­திப் போரின் போது எந்த வித­மான கரு­ணை­யும் தமி­ழர்­கள் மீது காட்­டப்­ப­ட­வில்லை. தமி­ழர்­கள் அனை­வ­ரும் புலி­க­ளா­கவே பார்க்­கப்­பட்­ட­னர். இறு­திப்­போ­ரின் போது சுமார் 40 ஆயி­ரம் தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் நிலை­யில் அதை­வி­டக் கூடு­த­லான எண்­ணிக்­கை­யா­ன­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர் என்று வேறு தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இறு­திப் போர் படுகொலையில்
இந்தியாவுக்கும் தொடர்புண்டு
இந்­தக் கொலை­க­ளு­டன் இந்­திய அர­சுக்­கும் தொடர்­பு­கள் உள்­ளன. போர் இடம்­பெற்ற போது இந்­தியா முக்­கி­ய­பங்கு வகித்­துள்­ளது. இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரும் களத்­தில் நின்­ற­னர் என்று தக­வல்­கள் அப்­போது வெளி­வந்­தன. இத­னால் தமி­ழர்­க­ளின் படு­கொ­லை­க­ளுக்கு இந்­தி­யா­வின் பங்­கும் இருந்­தமை தெளி­வாக நிரூ­ப­ண­மா­கின்­றது. காங்­கி­ரஸ் அரசே பத­வி­யில் இருந்­த­தால் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் இந்­தக் கொலை­க­ளுக்­கும் நெருங்­கிய தொடர்­பு­கள் இருக்­க­தான் செய்­கின்­றன.
இந்­திய நாடா­ளு­மன்­றத் தேர்­தல் விரை­வில் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் தமி­ழக மக்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தற்­காக ராகுல்­காந்தி கூறு­வதை எவ­ருமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். அதே­வேளை இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது இந்­தி­யா­வின் மத்­தி­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யும், தமிழ் நாட்­டில் தி.மு.கவும் ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருந்­தன.

போரில் தமி­ழர்­கள் கொல்­லப்­ப­டு­வதை வேடிக்கை பார்ப்­ப­தற்கு மட்­டுமே இந்த அர­சு­க­ளால் முடிந்­தது. தமி­ழர்­கள் கொல்­லப்­ப­டு­வது தொடர்­பாக இந்த இரண்டு அர­சு­க­ளும் சிறி­து­கூட அக்­கறை காட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான இந்­திய அரசு நினைத்­தி­ருந்­தால் ஒரு தற்­கா­லிக போர் நிறுத்­தத்­தை­யா­வது ஏற்­ப­டுத்தி தமி­ழர்­க­ளைப் பாது­காத்­தி­ருக்க முடி­யும். ஆகவே தமி­ழர்­க­ளின் படு­கொ­லை­க­ளில் இந்­திய அர­சுக்­கும் தொடர்­புள்­ளமை தெளி­வா­கின்­றது.

இத­னால் அரசை அமைத்த காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் தொடர்பு இருக்­கத்­தான் செய்­கின்­றது. ஆகவே ராகுல் காந்­தி­யின் கருத்து ஏற்க முடி­யாத ஒன்­றா­கும். இவற்றை இலங்­கைத் தமி­ழர்­கள் மட்­டு­மன்றி தமிழ்­நாட்டு மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ள­மாட்­டார்­கள்

You might also like