ஐரோப்­பா­வுக்­குள் நுழைய முயன்ற 558 பேர் கைது

ஐரோப்­பா­வுக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைய முயன்ற இலங்­கை­யர்­கள் உட்­பட 558 பேர் துருக்­கி­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

துருக்­கி­யின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள எடி­ரின் மாகா­ணத்­தில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பான மேல­திக தக­வல்­களை துருக்­கிய அதி­கா­ரி­கள் வெளி­யிட மறுத்து விட்­ட­னர் என்­றும் அந்த ஊட­கங்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் இலங்கை, பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஸ், துனி­சியா, ஈரான், ஈராக், பலஸ்­தீ­னம், எகிப்து, சிரியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் உள்­ள­டங்­கு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

You might also like