ஐ.நாவும் இலங்கையும்!!

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­துக்கு தெற்­கில் கிளம்­பி­யுள்ள எதிர்ப்பு அலை இன­வா­தி­க­ளுக்கு உற்­சாகமூட்­டு­வ­தாக அமைந் துள்­ளது.

நாட்­டின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆகி­யோர் இந்­தத் தீர்­மா­னத்­தில் அடங்­கி­யுள்ள விட­யங்­க­ளுக்­குத் தமது எதிர்ப்­புக்­களை பகி­ரங்­க­மா­கவே வெளி­யிட்­டுள்­ளார்­கள். இந்த அணி­யு­டன் ஜே.வி.பியும் இணைந் துள்­ளது.

நீதி கிடைக்­கக்­கூ­டாது
தமி­ழர்­க­ளுக்கு நீதி கிடைத்துவிடக்­கூ­டாது என்­பதே இந்த எதிர்ப்­பு­க­ளுக்­கான பிர­தான நோக்­க­மா­கும். தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­கள் தீவி­ர­மாக எழுந்­துள்­ள­தை­யும் இது எடுத்­துக் காட்­டு­கின்­றது. பன்­னாட்டு நீதி­ப­தி­கள் இலங்கை விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வ­தற்­கான சூழல் உரு­வா­கு­மா­னால் பிறி­தொரு கறுப்பு ஜூலை இங்கு உரு­வா­கி­வி­டு­மென எச்­ச­ரிக்­கும் அள­வுக்கு நிலமை மோச­மான கட்­டத்தை எட்­டி­விட்­டது.

ஐ.நாவின் புதிய தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ ச­ர­ணையை வழங்­கி­விட்டு உள்­நாட்­டில் அதற்கு எதி­ரா­கக் குரல் கொடுத்து வரு­கின்­றமை நியா­யத்­தின் வழிப்­பட்­ட­தல்ல. பன்­னாட்­டுச் சமூ­கத்தை மட்­டு­மல்­லாது உள்­நாட்டு மக்­க­ளை­யும் ஏமாற்­று­கின்­ற­தொரு செயற்­பா­டாவே இதைப் பார்க்க முடி­கின்­றது.

தாம­தம் கூடாது
ஐ.நா. ஒரு பல­மான அமைப்­பாக இயங்­கி­யி­ருக்­கு­மா­னால் போரின் இறு­திக் கட்­டத்­தில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளைத் தடுத்து நிறுத்­தி­யி­ருக்க முடி­யும். வெள்­ளைக் கொடி­க­ளு­டன் படை­யி­ன­ரி­டம் சர­ண­டை­யச் சென்­ற­வர்­க­ளைக்­கூட காப்­பாற்ற முடி­யாத நிலை­யில்­தான் ஐ.நா. இருந்­தி­ருக்­கின்­றது. ஐ.நாவின் பொதுச் செய­லா­ள­ரா­க­ வி­ருந்த பான்கீ மூனின் நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே அப்­போது மாறி­விட்­டி­ருந்­தது.

அவ­ரால் தமது கட­மை­க­ளைச் சரி­வர ஆற்ற முடி­ய­வில்லை என்­பதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.ஐ.நாவில் ஏக­ம­ன­தாக நிறை­வே­றிய ஒரு தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் எவ்­வித தாம­த­மும் இருக்­கக்­கூ­டாது. ஆனால் இதற்­கான தற்­து­ணிவு ஐ.நாவி­டம் உள்­ளதா? என்­ப­து­தான் கேள்­விக்கு உட்­பட்­டது.

ஆளு­நர்
ஜெனி­வா­வில் தமி­ழர் குழுக்­கள் ஓர­ணி­யாக செயற்­ப­ட­வில்­லை­யென்ற வடக்கு ஆளு­ந­ரின் கருத்து ஏற்­கத்­தக்­கது. அர­சி­யல் ரீதி­யாக ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் இங்கு முரண்­பட்டு நின்­ற ­தைப்­போன்றே அவர்­கள் ஜெனி­வா­வி­லும் காணப்­பட்­டதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­ வில்லை. தமி­ழர்­கள் அனை­ வ­ரும் ஓர் அணி­யில் திரண்டு நிற்­காத வரை­யில் இவர்­க­ளால் எதை­யும் சாதித்­து­விட முடி­யாது.

பன்­னாட்டு நீதி­ப­தி ­க­ளைக்­கொண்ட விசா­ர­ணை­யைத் தாம் எதிர்ப்­ப­தாக ஆளு­நர் தெரி­வித்­துப் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் வெறுப்­பைச் சம்­பா­தித்­துக்­கொண்­டார். அர­சுக்கு வக்­கா­லத்து வாங்­கு­வ­தா­க­வும் இவர்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பின்­னர் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் தாம் கூறி­யதை வடக்கு ஆளு­நர் தவ­றா­கப் புரிந்­து­கொண்­ட ­தா­கக் குற்­றம் சுமத்­தி­னார். ஆளு­ந­ரின் தேசி­யப் பாட­சா­லை­கள் தொடர்­பான கருத்து மற்­றும் யாழ். மாந­கர சபைக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நடப்­பட்ட கம்­பங்­களை அகற்­று­வ­தற்கு ஆளு­நர் தடை­யாக விருப்­ப­தாக மாந­க­ர­ச­பை­யி­னர் தெரி­வித்­துள்­ளமை ஆகி­ய­ன­வும் ஆளு­ந­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­த­வல்­லன.

சிங்­கள விசு­வாசி
வடக்கு ஆளு­ந­ராக தமி­ழர் ஒரு­வரை நிய­மித்து அவர் ஊடா­கவே வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் தேவை­யில்லை என்ற கருத்தை உலக அரங்­கில் சொல்ல வைத்­துள்­ளது அரசு. ஆளு­நர் என்ற பத­வி­யில் தமி­ழர் ஒரு­வர் அமர்ந்­தால் என்ன, சிங்­க­ள­வர் ஒரு­வர் அமர்ந்­தால் என்ன, அந்­தப் பத­வி­யின் இருக்கை அவர்­களை சிங்­கள விசு­வா­சி­யாக மாற்­றி­வி­டும்.

ஐ.நா. தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தில் தென்­னி­லங்கை தலை­வர்­கள் ஓர­ணி­யில் திரண்­டுள்ள இந்­தத் தரு­ணத்­தில், அவர்­க­ளுக்கு ஒத்து ஊதும் விதத்­தி­லேயே வடக்கு ஆளு­நர் செயற்­ப­டு­கின்­றார் என்­ப­தும் துர­திஷ்டமா­னதே.

You might also like