ஓ.எம்.பி. உறுப்­பி­னர்­கள் மன்­னா­ருக்கு களப்­ப­ய­ணம்!!

காணா­மற்­போ­னோர் தொடர்­பான பணி­ய­கத்­தின் (ஓ.எம்.பி.) உறுப்­பி­னர்­கள் மே மாதம் 12 ஆம் திகதி மன்­னார் மாவட்­டத்­துக்­குக் களப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ள­னர்.

காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­களை நேரில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டு­வ­தும், பிராந்­திய அலு­வ­ல­கம் அமைப்­பது சம்­பந்­த­மாக ஆராய்­வ­துமே பய­ணத்­தின் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள ஏனைய மாவட்­டங்­க­ளுக்­கான பயண நிகழ்ச்சி நிரல் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­தின் உறுப்­பி­னர்­கள் நாளை­ம­று­தி­னம் 23ஆம் திகதி கூட­வுள்­ள­னர். இந்­தத் தக­வலை பணி­ய­கத்­தின் தலை­வர் சாலிய பீரிஸ் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னார்.

காணா­மற்­போ­னோர் பணி­ய­கம் நிறு­வப்­பட்­டுள்­ள­போ­தி­லும் அதன்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இன்­னும் நிரந்­த­ரக் கட்­ட­டம் வழங்­கப்­ப­ட­வில்லை. தற்­கா­லிக அலு­வ­ல­க­மொன்­றின் ஊடாக ஆரம்­பக் கட்­டப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
அலு­வ­ல­கத்­துக்­குப் பணி­யா­ளர்­களை நிய­மிக்­கும் செயற்­பாடு இடம்­பெ­று­கி­றது.

23ஆம் திகதி நடை­பெ­றும் கூட்­டத்­தில் பணி­யா­ளர்­க­ளுக்­கான வேலைக்­கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும். அதன் பின்­னர் பணி­ய­கத்­தின் செயற்­பாடு ஆரம்­ப­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

முதற்­கட்­ட­மாக, காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளு­டன் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கும். இதன் ஓர் அங்­க­மா­கவே மண்­டை­யோ­டு­கள் வெளிக்­கி­ளம்­பிய மன்­னார் மாவட்­டத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்டு காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளைப் பணி­ய­கத்­தின் உறுப்­பி­னர்­கள் நேரில் சந்­திக்­க­வுள்­ள­னர்.

ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யில் இலங்­கை­யின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் பிர­கா­ரமே காணா­மற்­போ­னோர் பணி­ய­கம் அமைக்­கப்­பட்­டது. கடும் போக்­கு­டைய சிங்­கள தேசி­ய­வாத அமைப்­பு­க­ளும், மகிந்த அணி­யும் இதற்­குக் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டன.

கடும் இழு­ப­றிக்கு மத்­தி­யி­லேயே சட்­ட­மூ­லம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. மேற்­பட்டி சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு சுமார் ஒன்­றரை வரு­டத்­துக்கு பிறகே பணி­ய­கத்­துக்­கான தலை­வர் மற்­றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளைக் கடந்த பெப்­ர­வரி மாதம் 29 ஆம் திகதி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்­தார்.

காணா­மற்­போ­னோர் தொடர்­பில் விவ­ரங்­களை அறிந்­து­கொள்­வ­தும், தக­வல்­களை உற­வி­னர்­க­ளுக்­குப் பெற்­றுக்­கொ­டுப்­ப­துமே இந்­தக்­கு­ழு­வின் நோக்­கம்.

காணா­மற்­போ­ன­வர்­கள் சம்­பந்­த­மாக எதிர்­கால நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளல் தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுக்­குப் பரிந்­து­ரை­களை முன்­வைத்­தல், காணா­மல்­போ­னோர் மற்­றும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளின் உரி­மை­கள் மற்­றும் பற்­று­தல்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள அறி­வு­றுத்­தல், அரச நிறு­வ­னங்­கள் மற்­றும் வேறு நிறு­வ­னங்­கள் மூலம் கண்­டு­பி­டிப்­ப­தற்கு முடி­யா­மற்­போன நபர்­க­ளின் விவ­ரங்­கள் அடங்­கிய தர­வு­க­ளைத் திரட்டி மைய தரவு வலை­ய­மைப்­பொன்றை ஏற்­ப­டுத்தி கோவைப்­ப­டுத்­தல் போன்ற பணி­களை இந்­தக்­குழு முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் பணி­ய­கம் அமைப்­ப­தற்­கும் அதன் செயற்­பா­டு­க­ளுக்­கும் என்று 1.3 பில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டது.

மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தி­லும் காணா­மற்­போ­னோர் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காக மெக்ஸ்­வெல் பர­ண­கம தலை­மை­யில் அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான கூட்­டாட்­சி­யி­லும் அந்­தக் குழு செயற்­பட்டு தமது இறுதி அறிக்­கையை கைய­ளித்­தமை தெரிந்­ததே.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close