கட­மையை நிறை­வேற்­றுங்­கள்!!

இ ன்று உலக ஊடக சுதந்­தி­ர­நாள். இந்த ஆண்டு அனைத்­து­லக ஊட­கச் சுட்­டெண்­ணில் 10 இடங்­க­ளுக்கு முன்­னோக்கி நகர்ந்­தி­ருக்­கி­றது இலங்கை. அதை நினைத்து மகிழ்ச்­சி­ய­டைய முடி­ய­வில்லை.

ஏனெ­னில்; இலங்­கைக்­குக் கிடைத்­தி­ருக்­கும் இடம் 131. மோச­மான ஊட­கப் பண்­பாடு உள்ள நாடு­க­ளின் வரி­சை­யி­லேயே இலங்­கை­யும் இணைக்­கப்­பட்­டுள்­ள­து­ எல்­லை­கள் கடந்த பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அமைப்­பால். இலங்­கை­யின் பின்­னால் வெறும் 49 நாடு­கள் மட்­டுமே உள்­ளன.

நல்­லாட்சி அரசு என்று தன்­னைத் தானே கூறிக்­கொள்­ளும் இன்­றைய அரசு பத­விக்கு வந்­த­போது நல்­ல­தொரு ஊட­கப் பண்­பாடு உரு­வாக்­கப்­ப­டும், ஊட­கங்­க­ளுக்­கான நெருக்­க­டி­கள் நீக்­கப்­ப­டும் என்­றெல்­லாம் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது.

ஆனால், எல்­லை­கள் கடந்த பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அமைப்பு தனது 2018ஆம் ஆண்டு அறிக்­கை­யில் கூறி­யுள்ள, பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மீதான பகை­மையை வளர்க்­கும் போக்கு மற்­றும் ஊட­கங்­கள் மீதான வெறுப்­பு­ணர்வை வளர்க்­கும் வகை­யி­லான அர­சி­யல் தலை­வர்­க­ளின் பகி­ரங்­க­மான பேச்சு என்­பவை மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­திற்கே ஆபத்­தாக அமைக்­கின்­ற­மையை அண்­மைக் கால­மாக இலங்­கை­யி­லும் பார்க்க முடி­கின்­றது.

இலங்கை நாட்­டின் தலை­வர்­க­ளும் ,அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் ,பத்­தி­ரி­கை­க­ளுக்­கும் அவற்­றின் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் எதி­ரா­கப் பொது வெளி­யில் கடு­மை­யா­கக் கருத்­துத் தெரி­விப்­ப­தும், விமர்­சிப்­ப­தும் அண்­மைக் கால­மாக அதி­க­மா­கவே நடந்­தி­ருக்­கி­றது.

சிங்­கள, ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் ஒரு பிடி பிடிப்­ப­தைப் போன்றே, தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளை­யும் ஊட­கங்­க­ளை­யும் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் கடு­மை­யாக விமர்­சிக்­கத் தவ­ற­வில்லை.

இவ்­வாறு பத்­தி­ரி­கை­கள் மீதும், பத்­தி­ரி­கையா­ளர்­கள் மீதும் பொது­மக்­க­ளுக்கு வெறுப்­பு­ணர்வு வரக்­கூ­டிய வகை­யில் அர­சி­யல் தலை­வர்­கள் பேசு­வ­தும், அத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளைச் செயற்­ப­டுத்த ஊக்­க­ம­ளிப்­ப­தும் ,மக்­க­ளாட்­சிக்கே ஆபத்­தா­ன­தாக வந்து முடி­யும் என்றே எச்­ச­ரித்­துள்­ளது எல்­லை­கள் கடந்த பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அமைப்பு. ஊட­கங்­க­ளின் தவ­று­கள் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­ வேண்­டும், அவை திருத்­தப்­ப­ட­வும் வேண்­டும்.

எனி­னும் அத்­த­கைய கருத்­துக்­கள் ஊட­கங்­கள் மீதும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மீதும் பொது மக்­கள் வெறுப்­ப­டை­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத் தலை­வர்­கள் நினை­வி­ருத்­திக்­கொள்­வது அவ­சி­யம்.

அதே­வே­ளை­யில், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கக் கடந்த காலங்­க­ளில் நிகழ்ந்த மிக மோச­மான சம்­ப­வங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நடத்தி, குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­ட­னை­யில் இருந்து காப்­பாற்­றும் இலங்­கை­யின் போக்குக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வும் இன்­றைய அரசு உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைக் கொலை செய்­த­வர்­கள் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­க­ளைத் தாக்­கி­ய­வர்­க­ளைச் சட்­டத்­தின் முன் நிறுத்­து­வோம் என்­பது தேர்­த­லுக்கு முன்­னர் இந்த அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளில் ஒன்று.

ஆனால், இன்­று­வரை அது நடை­பெ­ற­வும் இல்லை. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைப் பாது­காப்­ப­தன் மூல­மும், அவர்­க­ளின் பணிச் சூழ­லைப் பாது­காப்­பா­ன­தாக உறு­திப்­ப­டுத்­து­வ­தன் மூல­மும் ஊடக சுதந்­தி­ரத்­தைப் பாது­காப்­பது அர­சு­க­ளின் முக்­கிய கடமை. முந்­திய அர­சு­க­ளைப் போலவே இந்த அர­சும் அந்­தக் கட­மை­யில் இருந்து தவ­றி­யி­ருக்­கி­றது. தொடர்ந்­தும் தவறி வரு­கின்­றது.

இந்­தப் போக்­குக்­கும் முற்­றுப்­புள்ளி வைத்து ஊட­கப் படு­கொ­லை­க­ளி­ன­தும் ஊடக நிறு­வ­னங்­கள் மீதான தாக்­கு­தல்­க­ளி­ன­தும் சூத்­தி­ர­தா­ரி­கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும். ஊட­கங்­கள் மீதான நெருக்­கு­தல்­கள் தவிர்க்­கப்­பட்டு ஊடக சுதந்­தி­ரம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்­பதே இன்­றைய உலக ஊடக சுதந்­திர நாளில் எமது வேணவா!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close