கடத்­தப்­பட்டு மீட்கப்பட்ட குழந்தை- தாயிடம் ஒப்படைப்பு!!

தாயு­டன் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட 8 மாதக் குழந்தை புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று மீட்­கப்­பட்­டார்.

கடத்­திய குழந்­தை­யைத் தம் வசம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் இரண்டு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வவு­னியா குட்­செட் வீதி முத­லாம் ஒழுங்­கை­யில் கடந்த 31ஆம் திகதி குழந்தை கடத்­தப்­பட்­டது. 6 பேர் கொண்ட குழு­வி­ன­ரால் குழந்தை கடத்­திச் செல்­லப்­பட்­டது என்று பொலிஸ் நிலை­யக் குற்­றத் தடுப்­புப் பிரி­வில் முறைப்­பாடு செய்­ய­பட்­டது. பொலி­ஸார் விசா­ர­ணை­க­ளைத் துரி­தப்­ப­டுத்­தி­னர். ஏனைய பொலிஸ் நிலை­யங்­க­ளுக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில், புதுக்­கு­டி­யி­ருப்பு விமா­னப் படை­யி­னர் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர். அதன்­படி நேற்­றுப் பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் குறித்த குழந்தை அங்கு வீடு ஒன்­றில் வைத்து மீட்­ட­னர்.

அங்கு குழந்­தையை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டி­லேயே முல்­லைத்­தீவு தேவி­பு­ரம் மற்­றும் யாழ்­பா­ணத்­தைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்­கத்­தக்க இரண்டு பெண்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். இந்­தத் தக­வல் வவு­னியா பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டது. குழந்தை தாயா­ரி­டம் நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

பொலி­ஸார் குழந்­தை­யின் தாயை புது­கு­டி­யி­ருப்பு நோக்கி அழைத்து சென்­ற­னர்.

குறித்த குழந்­தையை அவ­ரது கண­வனே ஆள்­களை வைத்­துக் கடத்­தி­யுள்­ளார் என்று குழந்­தை­யின் தாய் பொலி­ஸா­ருக்­குக் கூறி­யி­ருந்­தார். அத­ன­டிப்­ப­டை­யில் விசா­ரணை இடம்­பெற்­றது.

ஆனால் குழந்­தை­யைக் கடத்­திய குற்­றச்­சாட்­டில் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close