கண்­கா­ணிப்பு குறித்து ஐ.நா. ஆணை­ய­ருக்கு தெரி­யாதோ?

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அண்மையில் ஓர் அறிக்கை விடுத்­துள்­ளார். அவர் கூறி­ய­தைத் தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தும் அறிக்கை அது. அதே­நே­ரம் மறை­மு­க­மாக மற்­றொரு தெளி­வை­யும் அது வழங்­கி­யி­ருக்­கி­றது.

ஜெனிவா சென்ற இலங்­கைப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் ஆணை­யா­ள­ருக்­கும் இடை­யில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல் குறித்­துக் கொழும்­பில் உள்ள ஆங்­கி­லப் பத்­தி­ரிகை ஒன்­றுக்கு வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்த கருத்­துச் சரி­யா­ன­தல்ல, பிழை­யாக அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று அந்த அறிக்கை கூறு­கின்­றது.

ஐ.நா. ஆணை­ய­ரின் அறிக்­கை­யில் இலங்கை தொடர்­பில் கூறப்­பட்ட சில விட­யங்­கள் பொருந்­திப்­போக முடி­யா­தவை என்­பதை ஆணை­யா­ளர் ஏற்­றுக்­கொண்­டார் என்­றும் இது போன்ற விட­யங்­க­ளில் இனி­வ­ரும் காலங்­க­ளில் மிக அவ­தா­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்று தனது இரு அதி­ கா­ரி­க­ளுக்கு அவர் அறி­வு­றுத்­தி­னார் என்­றும் ஆளு­நர் தெரி­வித்­தி­ருந்­தார் என “டெய்லி மிரர்” ஆங்­கி­லப் பத்­தி­ரிகை தெரி­வித்­தி­ருந்­த­மையை மறுப்­ப­தற்­கா­கவே அந்த அறிக்கை.
அந்த இரு கருத்­துக்­க­ளுமே உண்­மை­யற்­றவை என்­றும் ஒன்­றில் ஆளு­ந­ரின் கருத்­தைப் பத்­தி­ரிகை தவ­றா­கப் புரிந்­து­கொண்­டி­ருக்­க­லாம் அல்­லது தனது கருத்தை ஆளு­நர் தவ­றா­கப் புரிந்­தி­ருக்­க­லாம் அல்­லது தனது கருத்­தைத் தவ­றாக மேற்­கோள்­காட்­டி­யி­ருக்­க­லாம் என்­றும் தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஆணை­யா­ளர். அதற்­கும் மேலாக, இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரது முழு அறிக்­கை­யை­யும் அது தொடர்­பான தனது வாய் மூல அறிக்­கை­யை­யும் தான் இப்­போ­தும் ஆணித்­த­ர­மாக வழி­மொ­ழிந்து நிற்­கி­றேன் என்­றும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இது ஆளு­ந­ரின் கருத்­தோடு தொடர்­பு­பட்­டது. இன்­னும் சொல்­லப்­போ­னால் இதற்­கா­கத்­தான் அறிக்­கையே வெளி­யா­னது. ஆனால், அவ­ரது அறிக்­கை­யில் மற்­றொரு இடத்­தில் கூறப்­பட்­டி­ருக்­கும் விட­யம் கூர்ந்து நோக்­கப்­ப­ட­வேண்­டி­யது. ஏனெ­னில் அது தொடர்­பில் ஜெனிவா அமர்­வுக்கு முன்­ன­தாக தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் பரப்­பில் கடும் வாதப் பிர­தி­வா­தங்­கள் நடந்­தன. ஊட­கங்­கள்­கூட அதற்­கா­கக் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டன, குற்­றஞ்­சாட்­டப்­பட்­டன.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு வழங்­கப்­ப­டப்­போ­வது 2 வருட கால அவ­கா­சமா அல்­லது 2 வரு­டக் கண்­கா­ணிப்பு நீடிப்பா என்­பது தொடர்­பா­னது அந்த விவ­கா­ரம். இலங்கை தொடர்­பான ஐ.நா. தீர்­மான வரைவு வெளி­யா­னது முதல் கொழும்­புக்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டப்­போ­கி­றது என்­றன ஊட­கங்­கள். ஆனால் அப்­ப­டிச் சொல்­வது தவறு என்­ற­னர் தமி­ழ் அரசுக் கட்­சி­யைச் சேர்ந்த சிலர்.தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தி­லும் இந்த விளக்­கம் வழங்­கப்­பட்டு, ஏற்­கப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யில் கண்­கா­ணிப்பை நீடிக்க அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஏப்­ர­காம் சுமந்­தி­ரன் இன்­னும் ஒரு­படி மேலே சென்று எத்­தனை தரம் சொன்­னா­லும் வேண்­டு­மென்றே ஊட­கங்­கள் திரி­பு­ப­டுத்­து­கின்­றன என்று வசை­பா­டி­னார். இந்­தப் பின்­ன­ணி­யில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அறிக்கை உண்மை எது என்­ப­தைச் சொல்­லி­யி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 30/1 (2015), 34-/1 (2017) தீர்­மா­னங்­க­ளைச் செயற்­ப­டுத்த இலங்கை அர­சுக்­கும் அதன் மக்­க­ளுக்­கும் ஒத்­து­ழைப்பு வழங்க தானும் தனது அலு­வ­ல­கத்­தி­ன­ரும் மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் உள்­ளார்­கள் என்­றும் அத்­தோடு நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ஏற்­றுக்­கொண்ட பொறுப்­புக்­களை முழு­மை­யாக நிறை­வேற்றி முடிப்­ப­தற்கு மேலும் இரண்டு வரு­டங்­க­ளைக் கடந்த வாரம் நிறை­வேற்­றிய மற்­றொரு தீர்­மா­னத்­தின் (40/1) மூலம் மனித உரி­மை­கள் சபை வழங்­கி­யி­ருக்­கி­றது என்­றும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தீர்­மா­னத்தை நிறை­வேற்ற மேலும் இரண்டு வரு­டங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று ஆணை­யா­ளர் கூறி­யி­ருக்­கி­றாரே தவிர, இலங்­கை­யின் மீதான கண்­கா­ணிப்பை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடித்­தி­ருக்­கி­றது என்று எந்த இடத்­தி­லும் அவர் குறிப்­பி­ட­வில்லை. ஆக மொத்­தத்­தில் கொழும்­புக்கு வழங்­கப்­பட்­டது கால அவ­கா­சம்­தான் என்று ஊட­கங்­கள் கூறி­ய­தில் தவறு ஏதும் இல்லை.

ஒரு­வேளை இத­னை­யும் நாம் தவ­று­த­லா­கப் புரிந்­து­ கொண்­டி­ருந்­தால் ஆணை­யா­ளர் மற்­றொரு அறிக்கை மூலம் அது கால அவ­கா­சம் இல்லை, கண்­கா­ணிப்­புத்­தான் என்று தெளி­வு­ப­டுத்­து­வார் என்று எதிர்­பார்க்­க­லாம்!

You might also like