கண்­ணி­வெடி அகற்­றிய -இரு பெண்­கள் படு­கா­யம்!!

கண்­ணி­வெடி அகற்­றும் பணி­யில் ஈடு­பட்ட இரு பெண்­கள் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் அதி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

த ஹலோ ரட்ஸ் மனி­தா­பி­மான கண்­ணி­வெடி அகற்­றும் பணி­யா­ளர்­கள் இரு­வரே அவ்­வாறு காய­ம­டைந்­த­வர்­க­ளா­வர்.

முக­மாலை பகு­தி­யில் நேற்­றுக் காலை முதல் முக­மா­லைப் பகு­தி­யில் கண்­ணி­வெடி அகற்­றும் பணி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த போதே, பகல் 2.30 மணி­ய­ள­வில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

வெடித்த சத்­தம் கேட்­ட­போது ஏனைய பணி­யா­ளர்­கள் சம்­பவ இடத்­துக்­குச் சென்று அங்கு படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் இருந்த இரு­வ­ரை­யும் காப்­பாற்­றி­ய­து­டன், அவர்­கள் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இந்த விபத்­துச் சம்­ப­வம் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

You might also like