கனடா உயர் அதிகாரிகள் – தமிழர் மரபுரிமை பேரவையுடன் சந்திப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், தமிழர் மரபுரிமை பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பொன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு,அத்துமீறிய மத பரம்பல் தமிழர்களின் பூர்வீகங்கள் பறிபோதால் தொடர்பில் பேரவையினர், கனேடிய அதிகாரிக்கு எடுத்துரைத்தனர்.