கன்­னி­யா­வில் மீண்­டும் அமை­க்கப்படும் விகாரை!!

திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்நீ­ரூற்­றுப் பகு­தி­யில் மீண்­டும் புத்­த­வி­காரை அமைக்­கும் பணி­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் ஈடு­பட்­டுள்­ளது என்று தென்­க­யிலை ஆதீன குரு முதல்­வர் குற்­றஞ்­சாட்­டி­
யுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் மேலும்தெரி­வித்­த­தா­வது:
திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்நீ­ரூற்­றுப் பகு­தி­யில் மீண்­டும் புத்­த­வி­காரை அமைக்­கும் பணி­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் ஈடு­பட்­டுள்­ளது. கடந்த திங்­கள்­கி­ழமை முதல் கன்­னியா பிள்­ளை­யார் ஆல­யம் அமைந்­தி­ருந்த பிர­தே­சத்­தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்­கும் பணி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு ஏன் செய்­கின்­றீர்­கள் என்று கேட்­டால், திரு­கோ­ண­மலை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே விகாரை அமைக்­கும் பணியை முன்­னெ­டுக்­கின்­றோம் என்று தெரி­விக்­கின்­ற­னர்.

ஆனால் அவ்­வாறு விகாரை அமைப்­ப­தற்கு எவ­ரா­லும் எந்த அனு­ம­தி­யும் வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னால் அவர்­க­ளின் இந்த அத்­து­மீ­ற­லைத் தடுக்க தக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் – என்­றார்.

You might also like