side Add

கருணாநிதியின் நினைவிடத்தில் -நடிகை த்ரிஷா அஞ்சலி!!

மறைந்த கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடலைப் பார்க்க முடியாதவர்கள்,அவருடைய நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு நேற்றுச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

“சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர், எழுத்தாளர் எனப் பலத் திறமைகள் கொண்ட மிகப்பெரிய மனிதர். அவருடைய இழப்பை எண்ணி நீண்ட நாள்களுக்கு நாம் வருத்தப்படுவோம்” என்று த்ரிஷா அனுதாபம் வெளியிட்டார்.

You might also like