கரும்­பு­லி­கள் நினை­வேந்­தல் எழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிப்பு!!

சாவுக்கு நாள் குறித்து சரித்­தி­ரம் படைத்த கரும்­பு­லி­கள் நாள் நேற்று தாய­கம் உட்­பட உல­கத் தமி­ழர்­கள் வாழும் இட­மெல்­லாம் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

தாய­கத்­தில் அவ­ச­ர­கா­லச் சட்­டம் தற்­போது நடை­மு­றை­யில் உள்ள நிலை­யில் உற­வு­கள் பல­ரும் தமது வீடு­க­ளில் நினை­வேந்­தல்­களை மேற்­கொண்­டுள்­ள­னர். தமி­ழர் வாழும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் கரும்­பு­லி­கள் நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் நடை­பெற்­றது.

கிளி­நொச்­சி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அலு­வ­ல­க­மான அறி­வ­கத்­தில் நேற்­றுக் காலை கரும்­பு­லி­களி நாள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. பெண் கரும்­புலி அங்­க­யற்­கண்­ணிக்கு மலர் மாலை அணி­விக்­கப்­பட்டு, சுடர் ஏற்­றப்­பட்­டது. பின்­னர் மலர் தூவி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

தமி­ழர்­க­ளின் வர­லா­று­களை கடைப்­பி­டிக்க வேண்­டிய அதனை அடுத்த சந்­த­திக்கு கொண்டு செல்ல வேண்­டிய பொறுப்பு எங்­கள் எல்­லோ­ரி­டத்­தி­லும் உள்­ளது என நிகழ்­வில் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறி­த­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

அங்கு கருத்­துத் தெரி­வித்த அவர், தமி­ழர்­க­ளின் உடைய வர­லாறு தற்­போது அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த வர­லா­று­களை கடைப்­பி­டிக்க வேண்­டிய அதை அடுத்த கட்­டத்­துக்கு கடத்­திச் செல்ல வேண்­டிய பொறுப்பு எல்­லோ­ரி­டத்­தி­லும் உள்­ளது. அதில் இருந்து நாங்­கள் தவ­றிச் செல்­கின்­றோம் அல்­லது வில­கிச் செல்­கி­றோம் என்ற தோற்­றப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இந்த உயி­ரா­யு­த­மான கரும்­பு­லி­க­ளின் வாழ்க்கை மறக்க முடி­யாத ஒன்­றா­கும். ஒவ்­வொரு மாவீ­ரர்­க­ளின் கன­வு­க­ளுக்கு பின்­னும் பல்­வே­று­பட்ட தார்­ப­ரி­யங்­கள் உள்­ளன. அந்­தப் பெரும் தியா­க­மும் இன்று இருக்­கின்ற சமூ­கத்­துக்கு கடத்­தப்­ப­ட­வேண்­டும்.-என்­றார்.

நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறி­த­ரன், முன்­னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான த.குரு­கு­ல­ராஜா, சு.பசு­ப­திப்­பிள்ளை, மற்­றம் கரைச்சி, பச்­சி­லைப்­பள்ளி பூந­கரி பிர­தே­ச­ச­பை­க­ளின் தவி­சா­ளர்­கள் உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் செயற்­பாட்­டா­ளர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் எனப்­ப­லர் கலந்து கொண்டு வணக்­கம் செலுத்­தி­யுள்­ள­னர்.

You might also like