கற்பிட்டியில் கரையொதுங்கிய திமிங்கிலம்

0 47

கற்பிட்டிய – ஆலன்குடாவ கற்கரையில் 34 அடி நீளமான திமிங்கிலம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் உடலில் பெரிய காயம் ஒன்று காணப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திமிங்கிலம் தொடர்பில் வனவிலங்கு தளத்தின் பாதுகாப்பாளர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

திமிங்கிலம் சில மாதங்களுக்கு முன்னர் காயமடைந்துள்ளதாகவும், கப்பல் மோதியமையினால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

You might also like