கலாம் காட்­டிய பாதை­யில் ஹிரத்த பிர­சாத்

ஒரு மாண­வன் தனது தொழில்­நுட்­பத் திற­மை­யால், பறக்­கக்­கூ­டிய ஓர் உலங்கு வானூர்த்­தியை உரு­வாக்கி வெற்றி கண்­டி­ருப்­பது, எல்­லோ­ருக்­கும் மகிழ்ச்சி தரும் செய்­தி­யா­கும். 17வய­து­டைய ஓர் இளம் விஞ்­ஞா­னி­யான பிர­சாத், இந்த நாட்­டுக்­குப் பெருமை சேர்த்­துள்­ளான்.

மூன்று மாத­கா­ல­மா­கத் தான் எடுத்­துக் கொண்ட கடும் உழைப்­பின் பிர­கா­ரம் இந்த முயற்சி வெற்­றி­பெற்­ற­தா­கக் குறிப்­பி­டும் பிர­சாத், தான்­கற்ற பாட­சா­லை­யைப் பெரு­மைப்­ப­டுத்­து­கி­றார்.

தாய், தந்தை, உற்­றார், உற­வி­னர், ஆசி­ரி­யர்­கள், அதி­பர், கிரா­மத்­த­வர்­கள் என திம்­பு­லா­கல பிர­தே­சத்­தைத் தலை­வ­ணங்­கு­கின்­றார். அதே­வேளை இறை­வ­னை­யும் வழு­வாது தியா­னிக்க ஒரு போதும் மறப்­ப­து­மில்லை.

எந்­த­வொரு பிரார்த்­த­னை­யும் ஒரு நாளும் அவம் போவ­தில்­லை­யா­கை­யால், பிர­சாத்­திற்கு இயற்­கை­யும் கை கொடுத்­தது. இறை­வ­னும் கைகொ­டுத்­தான். இரண்­டுமே ஒரு­வ­னுக்­குச் சாத­க­மா­க­வும், ஆசிர்­வா­த­மா­க­வும் இருந்து விட்­டால், அவன் ஒரு மெஞ்­ஞா­னி­யா­க­வும், விஞ்­ஞா­னி­யா­க­வும் மிளி­ரு­வான்.

இலங்­கை­யில் விஞ்­ஞான மாண­வர்­க­ளைச் செவ்­வனே கவ­னிப்­ப­தற்­கும், ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்­கும், உப­கா­ரம் செய்­வ­தற்­கும் மிகுந்த தட்­டுப்­பா­டும், கட்­டுப்­பா­டும் நில­வு­கி­றது. யாழ்ப்­பா­ணம் ஒரு ஜப்­பா­னாக மாற­வேண்­டு­மா­யின், விஞ்­ஞான தொழில்­நுட்ப புத்­தாக்க முயற்­சி­க­ளுக்கு யாம் முன்­னு­ரிமை கொடுத்­தே­யாக வேண்­டும்.

யாழ்ப்­பா­ணத்­தின் இலக்கு இனி­மேல் கணித, விஞ்­ஞான, தொழில் நுட்ப கைத்­தொ­ழில் புத்­தாக்க முயற்­சி­யே­யொ­ழிய, அடுத்த சந்­த­திக்­குக் கோயி­லைக்­கட்­டு­வ­தற்­கும் கோபு­ரம் கட்­டு­வ­தற்­கும் வழி­வி­டு­வ­தாக அமைந்­து­வி­டு­த­லா­காது.

இனி­மே­லா­வது உயர்­தர வகுப்­பில் விஞ்­ஞான, கணித, தொழில் நுட்­பப் பாடங்­க­ளை மாண­வர்­க­ள் கற்­ப­தற்கு ஊக்­க­மும் ஆக்­க­மும் அளித்­திட யாம் முனைய வேண்­டும். முனை­யா­விட்­டால், யாழ்ப்­பா­ணத்­தில், தங்­கத்­தி­லான கோவில் கட்­டு­வ­தற்­கும், சோம்­பே­றி­யாக இருந்து வாழ்­வ­தற்­கும் நாம் ஆட்­கொள்­ளப்­ப­டு­வோம்.

ஹிரத்த பிர­சாத் என்ற மாண­வனை அரசு பாராட்ட வேண்­டும். ஒவ்­வொரு குடி­ம­க­னும் ஏற்­றிப் போற்ற வேண்­டும். அவ­னது ஒளிப்­ப­டத்­தினை ஒவ்­வொரு ஊட­க­மும் பிர­சு­ரிக்க ஆவ­ன­பு­ரிய வேண்­டும்.

ஏனென்­றால், மிக­வும் இல­கு­வா­கக் கிடைக்­கக்­கூ­டிய இரும்பு, தையல் இயந்­திரப் பாகங்­கள் கணினி உப­க­ர­ணங்­க­ளையே அவன் உப­யோ­கித்து உலங்கு வானூர்­தியை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றான். இதுவே மூன்­றாம் தர நாடு­க­ளுக்­கான மூல­த­னம்.

இந்த ஊர்த்­திக்­குப் பாது­காப்­பும், பறக்­கின்ற அனு­ம­தி­யை­யும் அரசு வழங்க வேண்­டும். எல்­லாம் வல்ல இறை­வ­னும் கருணை தந்து ஆசிர்­வ­திக்க வேண்­டும்.
கே.எஸ்.சிவ­ஞா­ன­ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close