காணா­மற்­போ­னோரே இல்லை யாரை ஏமாற்ற இந்­தப் பணி­ய­கம்?

இந்த நாட்­டில் காணா மற்போனோர் யாருமே உயி­ரு­டன் இல்லை என்று கைவி­ரித்த நிலை­யில், யாரை ஏமாற்­று­வ­தற்கு இந்­தப் பணி­ய­கம். இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் கேள்வி எழுப்­பி­னர்.

மன்­னார் மாவட்­டத்­திற்கு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தி­னர் நேற்று வருகை தந்­த­னர். மன்­னார் மாவட்ட காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­களை அவர்­கள் சந்­தித்­த­னர். இந்­தச் சந்­திப்பு நடை­பெ­றும் மண்­ட­பத்­துக்கு வெளியே, வவு­னியா மாவட்­டத்­தி­லி­ருந்து வருகை தந்த காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் போராட்­டம் நடத்­தி­னர். அவர்­களே மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பி­னர்.

இதேவேளை வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக எத்­தனை குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டா­லும், எத்­தனை பணி­ய­கங்­கள் திறந்­தா­லும் அவற்­றின் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை. இவ்­வாறு மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தெரி­வித்­த­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் அமைக்­கப்­பட்ட பின்­னர் முதல் தட­வை­யாக காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­களை பணி­யக ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நேற்று நேரில் சந்­தித்­த­னர். மன்­னார் மாவட்­டத்­தில் இடம்­பெற்ற இந்­தச் சந்­திப்பு காலை 9.30 மணி­யி­லி­ருந்து பி.ப. 3.30 மணி வரை மூன்று கட்­டங்­க­ளாக இடம்­பெற்­றது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளு­ட­னான சந்­திப்பு, சிவில் சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்பு, செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பு என்று இடம்­பெற்­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது அவர்­கள் மேலும் கூறி­ய­தா­வது,

பல­னில்லை
எமது உற­வு­கள் தொடர்­பாக நாங்­கள் பல்­வேறு போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம். அவர்­களை கண்­ட­றிய அர­சுக்கு நாம் தொடர்ந்­தும் அழுத்­தங்­க­ளைக் கொடுத்து வந்­தோம். ஆனால் எந்த பய­னு­மில்லை. எமது உற­வு­க­ளைத் தேடி தினம் தினம் அலைந்து திரி­கின்­றோம். பல்­வேறு முகாம்­க­ளுக்­கும் செல்­கின்­றோம். எமது வீடு­க­ளுக்கு வந்து புல­னாய்­வா­ளர்­கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர். அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொள்­கின்­ற­னர்.

முடிவு தெரி­ய­வில்லை
எமது உற­வு­கள் வீடு­க­ளி­லும், வீதி­க­ளி­லும் வைத்­தும் கடத்­தப்­பட்­டார்­கள். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் கட்­டுப்­பாட்டு பகு­தி­யி­லேயே நடந்­தது. இது தொடர்­பில் பல இடங்­க­ளில் முறை­யிட்­டும் எமக்கு எந்த முடி­வும் கிடைக்­க­வில்லை.
இலங்­கை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் யாரும் இல்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தெரி­வித்­துள்­ளார். எமது பிள்­ளை­க­ளை­யும், உற­வு­க­ளை­யும் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­களா கடத்­திச் சென்­றார்­க­ளர் ?

நம்­பிக்­கை­யில்லை
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கம் தொடர்­பில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. ஆனா­லும் இந்­தப் பணி­ய­கம் ஊடாக என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­ப­தைப் பார்ப்­போம் – என்று குறிப்­பிட்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close