காணா­மற்­போன சகோ­த­ரர்­கள்- சட­லங்­க­ளாக கரை­யொ­துங்­கி­னர்!!

தலை­மன்­னார் கடற்­ப­குதி ஊடாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை மீன்­பி­டிக்கக் கட­லுக்­குச் சென்று காணா­மற்­போன ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் 6 நாள்­க­ளின் பின்­னர் நேற்­றுப் புதன்­கி­ழமை மதி­யம் புங்­கு­டு­தீவு கடற்­க­ரை­யில் சட­லங்­க­ளாக கரை ஒதுங்­கி­யுள்­ள­னர்.

தலை­மன்­னார் மேற்கு கிரா­மத்­தைச் சேர்ந்த இரு சகோ­த­ரர்­க­ளான தோ.கிறிஸ்­ரின் கூஞ்ஞ (வயது-32) மற்­றும் தோ.எமல்­ரன் கூஞ்ஞ (வயது-37) கடந்த 8ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கட­லில் போடப்­பட்ட நண்டு வலை­யைக் கரை சேர்ப்­ப­தற்­காக பட­கில் சென்­றுள்­ள­னர்.

இவர்­கள் அன்று வழ­மை­போன்று வீடு வந்து சேரா­மை­யால் அன்று தொடக்­கம் நேற்­றுப் புதன் கிழமை வரை ஆறு நாள்­க­ளாக கிராம மீன­வர்­கள் 10 பட­கு­க­ளி­லும், கடற்­ப­டை­யி­னர் தங்­கள் பட­கு­க­ளி­லும் வட கடல் நோக்­கித் தேடு­தல் நடை­பெற்று வந்­தது.

இவர்­கள் சென்ற படகு கவிழ்ந்து பாதிப்­ப­டைந்த நிலை­யில் புங்­கு­டு­தீ­வுப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் கரை ஒதுங்­கி­யது.

இந்த நிலை­யில் உருக்­கு­லைந்த நிலை­யில் இரண்டு சட­லங்­கள் நேற்று மதி­யம் கரை ஒதுங்­கி­யது. சட­லங்­களை, மன்­னா­ரி­லி­ருந்து வந்த உற­வி­னர்­கள் அடை­யா­ளம் காட்­டி­னர்.

ஊர்­கா­வற்­து­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close