காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு- இராணுவமே பொறுப்பு- உறவினர்கள் ஆதங்கம்!!

“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்கவேண்டும்“ என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் உறுப்பினர் ஆ. லீலாதேவி தெரிவித்ததாவது,

காணாமல் போன உறவுகள் தம்மிடம் சரணடையவில்லை. அது தொடர்பாக அரசிடம் கேட்க வேண்டும் என்று இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இராணுவம் வேறு அரசு வேறு என்று கூறக்கூடிய விடயம் அல்ல.

போர்க் காலத்தில் முன்னரங்கில் நின்றது இராணுவமே. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தது இராணுவத்திடமே. இவ்வாறான நிலையில் இராணுவ அதிகாரி தங்களிடம் சரணடையவில்லை எனக் கூறுவது கேலிக்குரியது. எனவே இராணுவமே இதற்கு பதில் சொல்லவேண்டும். – என்றார்.

You might also like