காதலனைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் பொலிஸ் நிலையம் முன் போராட்டம்!!

காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் ஒருவர் பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டள்ளார்.

சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை, பூந்தமல்லியை சேர்ந்த லத்திபா என்பவர் காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டிய அரவிந்த், வீட்டார் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் லத்திபாவுடன் முரண்பட்டுள்ளார்.

இரு தடவைகள் கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்த லத்தீபா மனவேதனையடைந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

எனினும் பொலிஸார் அரவிந்துக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர் எனத் தெரிவித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

You might also like