காற்­றாலை நிறு­வ­னத்­துக்கு காணி கொடுக்க- வடக்கு முதல்வர் ஒப்­பு­தல்!!

0 20

பளை­யில் அமைந்­துள்ள காற்­றாலை நிறு­வ­னத் துக்கு வழங்­கப்­பட்ட அரச காணி, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் ஒப்­பு­த­லு­ட­னேயே வழங்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஒப்­பு­தல் வழங்­கிய ஆவ­ணம் வடக்கு மாகாண பொதுக்­க­ணக்­காய்­வுக் குழு முன்­பாக அதி­கா­ரி­க­ளால் நேற்­றுக் காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பளைக் காற்­றாலை நிறு­வ­னத்­தால் வடக்கு மாகாண சபைக்கு வர­வேண்­டிய கோடிக் கணக்­கான நிதி இழக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யால் கண்­ட­றி­யப்­பட்­டது. இது தொடர்­பில் கடந்த மாகா­ண­ சபை அமர் வில் சுட்­டிக்­காட்டப்பட்­டது.

இந்­தத் திட்­டம் முத­லீட்­டுச் சபை­யின் திட்­டம் என்­றும், மாகா­ண­சபை பத­விக்கு வர முன்­னர் உரிய அனு­மதி பெற்­றுச் செயற்­ப­டுத்­தி­னார்­கள் என்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தனது கேள்வி -– பதில் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்­கிய ஒப்­பு­தல் கடி­தத்தை அதி­கா­ரி­கள் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பா­கக் காண்­பித்­துள்­ள­னர்.

மாகாணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பாக பளைக் காற்­றாலை விவ­கா­ரம் நேற்று ஆரா­யப்­பட்­டது. பளைக் காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் தங்­க­ளி­டம் இல்லை என்று அதி­கா­ரி­கள் பதி­ல­ளித்­துள்­ள­னர். இந்த ஒப்­பந்­தம், வடக்கு மாகாணப் பேர­வைச் செய­ல­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அது சட்­ட­ரீ­தி­யாக ஏற்­பு­டை­யது அல்ல என்­ப­தைக் குறிப்­பிட்டு மாகாண தலை­மைச் செய­ல­ரால் அதே ஆண்டு நவம்­பர் மாதம் புதிய ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் முன்­னர் மேற்­கொண்ட ஒப்­பந்­தம் தங்­க­ளது அமைச்­சில் இல்லை என்று விவ­சாய அமைச்­சின் செய­ல­ரும், அதி­கா­ரி­க­ளும் நேற்­றுப் பதி­ல­ளித்­துள்­ள­னர். அந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் எழுப்­பப்­ப­டும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க முடி­யாது என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

பளைக் காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் 2014 ஆம் ஆண்டு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்ட திக­தி­யன்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அரச காணியை அந்த நிறு­வ­னத்­துக்கு கொடுக்­கும் ஒப்­பு­தல் கடி­தத்தை வழங்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண காணி ஆணை­யா­ளர் அனு­ம­தித்த பின்­னர் இந்த ஒப்­பு­தலை முத­ல­மைச்­சர் வழங்­கி­யுள்­ளார்.

இதே­வேளை, காற்­றாலை நிறு­வ­னம் சகல அனு­ம­தி­க­ளை­யும் பெற்­றுக் கொண்ட பின்­னர் ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஒப்­பந்­தத்­தில் கூறப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஒப்­பு­தல் வழங்­கிய சில மாதங்­க­ளின் பின்­னரே, கொழும்பு அர­சின் காணி ஆணை­யா­ளர் காணிக்­கு­ரிய அனு­மதி வழங்­கி­யுள்­ளார். அதி­கா­ரி­க­ளால் பொதுக்­க­ணக்­காய்­வுக் குழு­வுக்கு நேற்­றுச் சமர்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து இது தெரி­ய­வந்­துள்­ளது.

You might also like