கிம்­மைச் சந்­திக்­கும் நாளுக்காக – காத்திருக்கிறார் ட்ரம்ப்!!

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப், கிம்­மைச் சந்­திக்­கும் நாளை எதிர்­பார்த்­துக் காத்­துள்­ளேன் என்று தனது ருவிற்­ற­ரில் பதி­விட்­டுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வுக்­கும் – வட­கொ­ரி­யா­வுக்­கும் இடை­யில் தீராப் பகை நில­வி­வந்­தது. ட்ரம்ப் அதி­ப­ரா­கப் பத­வி­யேற்ற பின்­னர் வட­கொ­ரி­யா­வு­ட­னான உற­வில் மிகப்­பெ­ரிய விரி­சல் ஏற்­பட்­டது. இந்த நிலை­யில் எவ­ரும் எதிர்­பாரா வித­மாக கடந்த மாதம் 12ஆம் திகதி சிங்­கப்­பூ­ரில் வைத்து இரண்டு நாடு­க­ளின் அதி­பர்­க­ளும் சந்­தித்­த­னர்.

ட்ரம்ப்–கிம் இடை­யி­லான இந்­தச் சந்­திப்பு கொரி­யத் தீப­கற்­பத்­தில் நில­விய போர்ப் பதற்­றத்­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யது.

இந்­தச் சந்­திப்­பின்­போது இரண்டு அதி­பர்­க­ளும் பரஸ்­ப­ரம் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­னர்.
அதில் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டாது, அந்த நாட்­டுக்கு அமெ­ரிக்கா பாது­காப்­பாக இருக்­கும், தென்­கொ­ரி­யா­வு­டன் அமெ­ரிக்கா செய்­து­வந்த போர்ப் பயிற்சி இனி­வ­ரும் காலங்­க­ளில் இடம்­பெ­றாது என்­பன அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளாக அமைந்­தன.

அது­போல், அணு­வா­யு­தச் சோத­னை­கள், ஏவு­க­ணைச் சோத­னை­கள் இனி­வ­ரும் நாள்­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டாது. வட­கொ­ரி­யா­வி­டம் கையி­ருப்­பில் உள்ள அணு­வா­யு­தங்­க­ளும் அழிக்­கப்­ப­டும் என்று கிம் ஜோங் உன் உறுதி அளித்­தி­ருந்­தார்.

எனி­னும் இந்­தச் சந்­திப்­பின் பின்­ன­ரும் வட­கொ­ரியா தொடர்ந்து அணு­வா­யு­தச் சோத­னை­யில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றது என்று அமெ­ரிக்கா குற்­றம்­சாட்டி வந்­தது. வட­கொ­ரி­யத் தலை­ந­கர் பியாங்­யாங்­கிற்கு அரு­கில் இரண்டு எவு­க­ணைச் சோத­னை­க­ளில் ஈடு­பட வட­கொ­ரியா நகர்­வு­களை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றது என்று அமெ­ரிக்க ஊட­கங்­கள் குறிப்­பிட்­டி­ருந்­தன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், ‘‘அமெ­ரிக்­கா­வுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை வட­கொ­ரியா இறுக்­க­மா­கக் கடைப்­பி­டித்து வரு­கி­றது’’ என்று ட்ரம்­புக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார் கிம். இதற்குப் பதில் வழங்­கு­கை­யி­லேயே கிம்­மைச் சந்­திக்­கும் நாளை எதிர்­பார்த்­துள்­ளேன் என்று ருவிற்­ற­ரில் குறிப்­பிட்­டுள்­ளார் ட்ரம்ப்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close