side Add

கிராமங்களிலிருந்து  வெளியேற்றப்பட்ட மக்கள்!!

வவுனியா பாவற்குளம் பெருக்கெடுத்து இடர் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது என்ற ஒத்திகை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினரால் நடத்தப்பட்ட நிகழ்வில், ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, பராமரிப்பு மற்றும் முதலுதவி, மருத்துவ ஒத்திகைகள் செய்யப்பட்டன.

கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உதவிகளை மேற்கொண்டனர்.

ஒத்திகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பாவற்குளம் உடைப்பெடுத்தால் அண்டியுள்ள கிராமங்களான, பாவக்குளம் படிவம் 01, 04, 05, 06, சூடுவெந்தபுலவு, ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிநகர் மெனிக்பாம்,கங்கங்குளம் கிருஸ்தவகுளம் ஒட்ராகுளம் போன்ற கிராமங்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like