கிளிநொச்சிக்கு வருகிறார் மைத்திரி!!

மகிந்த ராஜ­பக்­சவை ஆட்­சி­யில் அமர்த்­திய பின்­னர், வடக்கு மாகா­ணத்­துக்கு முதல் தட­வை­யாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று வருகை தர­வுள்­ளார்.

கிளி­நொச்­சி­யில் மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட இர­ணை­ம­டுக் குளத்­தில் முதல் தட­வை­யாக 36 அடிக்கு நீர்த் தேக்­கப்­பட்­டுள்­ளது. அதனை விவ­சா­யி ­க­ளின் தேவைக்கு திறந்து விடும் நிகழ்வு இன்று காலை இர­ணை­ம­டுக் குளத்­தில் இடம்­பெற்­ற­வுள்­ளது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக பங்­கேற்­ப­தற்கே அரச தலை­வர் மைத்­தி­ரிபா சிறி­சேன வடக்கு மாகா­ணத்­துக்கு வருகை தர­வுள்­ளார்.
வடக்கு மாகா­ணத்­தின் மிகப் பெரிய குள­மான இர­ணை­மடு, மிக நீண்ட கால இழு­ப­றி­யின் பின்­னர் மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆட்­சிக் காலத்­தில், இர­ணை­ம­டுக் குள மறு­சீ­ர­மைப்­புத் தொடர்­பில் முதற் தட­வை­யாக ஆரா­யப்­பட்­டி­ருந்­தது. 2000ஆம் ஆண்டு, ய◌ாழ்ப்­பா­ணம் – கிளி­நொச்சி குடி­நீர் வழங்­கல் திட்­ட­மாக இத­னைச் செயற்­ப­டுத்த கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இர­ணை­ம­டுக் குளத்­தின் கொள்­ளவை அதி­க­ரித்து மறு­சீ­ர­மைத்­தல், யாழ்ப்­பா­ணம் கிளி­நொச்சி குடி­நீர் வழங்­கல் திட்­டம், யாழ்ப்­பா­ணம் மாந­கர பாதாள சாக்­க­டைத் திட்­டம் என்று மூன்று கூறு­க­ளாக முன்­னெ­டுக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபைக்­கும், ஆசிய அபி­வி­ருத்தி வங்­கிக்­கும் இடை­யில் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­போ­தும் போர் கார­ண­மாக அவை கிடப்­பில் போடப்­பட்­டன.

போரின் பின்­னர் அதே திட்­டம் முன்­னெ­டுக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­போ­தும், இர­ணை­மடு விவ­சா­யி­கள் யாழ்ப்­பா­ணம் கிளி­நொச்சி குடி­தண்­ணீர் வழங்­கல் திட்­டத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். இத­னை­ய­டுத்து திட்­டம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது.

இர­ணை­ம­டுக் குளத்­தின் கொள்­ளவை அதி­க­ரித்து குளத்தை மறு­சீ­ர­மைக்­கும் பணி­கள் மாத்­தி­ரம் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் 2 ஆயி­ரத்து 130 மில்­லி­யன் ரூபா செல­வில், 2016ஆம் ஆண்டு இந்­தப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. கடந்த ஓகஸ்ட் மாதம் பணி­கள் நிறை­வு­பெற்­றன.

34 அடி கொள்­ள­வு­டைய குள­மா­கக் காணப்­பட்ட இர­ணை­மடு 36 அடி கொள்­ள­வு­டைய குள­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. போதிய மழை­வீழ்ச்சி கிடைத்­த­மை­யால், 36 அடி நீரைத் தேக்­கக் கூடிய நிலமை ஏற்­பட்­டது.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றைய தினம், குளத்து நீரை விவ­சா­யி­க­ளின் தேவை­க­ளுக்கு திறந்து விடும் செயற்­பாட்டை ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார்.

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் வடக்கு மாகா­ணத்­தில் மகிந்த ராஜ­பக்­சவை விட பல மடங்கு அதி­க­மான வாக்­கு­கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்­தி­ருந்­தன. அவர் அரச தலை­வ­ரா­கத் தெரி­வாகி ஆட்­சி­ய­மைத்­தி­ருந்­தார். கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி, கூட்டு அரசு ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தி­ருந்­தார். நாட்­டில் அர­சி­யல் குழப்­பம் இதன் பின்­னர் ஏற்­பட்­டி­ருந்­தது.

You might also like