side Add

கிளிநொச்சியில்- கலாசார விழா!!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன், கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார பெருவிழா, பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் கலைநிகழ்வுகள் , நடனம், கர்நாடக இசை, கிராமிய இசை, கவியரங்கம், சமூக நாடகம் என்பன நிகழ்த்தப்பட்டன.

இதனைதொடர்ந்து கரையெழில் ஏழு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் லு.சுலேகா பெற்றுக்கொண்டார்.

You might also like