கீரிமலையிலும் நால்வர் கைது- கத்தி,கோடரி மீட்பு!!

சந்தேகத்துக்கு இட­மான முறை­யில் நட­மா­டிய 4 பேர் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து 3 கத்­தி­க­ளும், கைக்­கோ­டரி ஒன்­றும், ஸ்குரு ரைவர், சுத்­தி­யல் போன்ற பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்பாணம் கீரி­ம­லைப் பகு­தி­யில் சந்­தே­கத்­துக்கு இட­மா­கக் கூடி நின்­ற­வர்­க­ளி­டம் பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­யுள்­ள­னர். அதன்­போதே அவர்­க­ளி­டம் இருந்து இவை கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன் 20 ரூபா நாணத் தாள்­கள் 200 மற்­றும் 100, 500, 1000 நாண­யத்­தாள்­கள் என அவர்­க­ளி­டம் இருந்து 19 ஆயி­ரத்து 500 ரூபா மீட்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தே­க­ந­பர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை எதிர்­வ­ரும் 22ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

அதே­வேளை, கீரி­ம­லைப் பிர­தே­சத்­தில் உள்ள ஆல­யம் ஒன்­றில் நேற்று உண்­டி­யல் உடைத்­துத் திருட்டு நடை­பெற்­றுள்­ளது. அத்­து­டன் சில தினங்­க­ளுக்கு முன்­னர் பிர­தேச சபைக்­குச் சொந்­த­மான விளம்­ப­ரப் பதாகை ஒன்று சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்­றுக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு இந்­தச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­புள்­ளதா என்ற கோணத்­தில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like