குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு!!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்
படுகாயமடைந்த பல்கலைக்கழக மாணவி சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார்.

மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முதலாம் ஆண்டு மாணவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like