குண்டுத் தாக்குதல் அச்சம்- வவுனியா பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவு!!

நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்து, தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பின்னடித்துள்ளனர்.

ஆரம்பப் பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகக் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு முன்னாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கபட்டிருந்ததையடுத்து, இன்று மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like