குறுக்­கு ­வ­ழி­யில் முத­ல­மைச்­சர் பத­வியை குத்­த­கைக்கு எடுக்க முய­ல­க் கூடாது – சிவ­மோ­கன் எம்.பி. ஆதங்­கம்!!

தாயக வலி கண்­ட­வர்­க­ளுக்கே வடக்கு முத­ல­மைச்­சா­ரா­கத் தகுதி உண்டு. குறுக்கு வழி­ யில் முத­ல­மைச்­சர் பத­வியை குத்­த­கைக்கு எடுக்க முய­லக்­கூ­டாது. வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் சுதந்­தி­ர­பு­ரம் படு­கொ­லை­யின் 20ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சுதந்­தி­ர­பு­ரம் படு­கொலை நடக்­கும்­போது, நான் முல்லை மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிக் கொண்­டி­ருந்­தேன். அதி­காலை மண்­கிண்டி மலை­யில் இருந்து தூர­வீச்சு எறி­க­ணை­கள் மற்­றும் போர் வானூர்­தி­கள் ஊடாக நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் 30க்கு மேற்­பட்­ட­வர்­கள் உயி­ரி­ழந்­தி­ருந்­த­னர்.

பலர் காயங்­க­ளு­டன் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். இப்­ப­டி­யாக வலி­களை அனு­ப­வித்த நாங்­கள் மீண்­டும் ஒரு விடு­த­லையை நோக்கி மக்­களை சரி­யான பாதை­யில் இட்­டுச் செல்ல என்று வட மாகாண சபை­யை உரு­வாக்­கி­னோம். ஆனால் அதி­ லும் நாங்­கள் தவறு செய்து விட்­டோமோ என்ற எண்­ணம் எங்­க­ளுக்கு இருக்­கின்­றது.

இந்த வலி­களை சுமந்த ஒரு­வன் தான் வட­மா­காண சபை­யை நடத்­து­ப­வ­னாக இருக்க வேண்­டும். அதை­விட்டு குத்­த­ கைக்கு வட மாகா­ண­சபை எடுத்­த­வர்­க­ளி­னால் இன்று பல இடர்­களை நாம் எதிர்­கொள்­கின்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றோம்.

வட மாகா­ண­சபை முத­ல­மைச்­சர் பத­வி­யைக் குத்­த­கைக்கு எடுத்­துக் கொண்­ட­வர்­கள் மீண்­டும் ஒரு தடவை, 5 ஆண்­டு­கள் குத்­த­கைக்கு எடுப்­ப­தற்­காக கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு நிற்­கின்­றார்­கள். அது எமக்கு ஓர் பிரச்­சி­னை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை.

எமது மக்­களை உடைத்து அவர்­களை தூள் தூளாக்கி ஒரு பொறுப்பை எடுப்­ப­தற்கு இந்த மண் எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக் கொள் ளாது. யார் ஏற்­றுக்­கொண்­டா­லும் அதனை நான் ஒரு பொழு­தும் ஏற்­றுக்­கொள்­ளப் போவ­ தில்லை.

ஏனென்­றால், நாம் இந்த மண்­ணில் மக்­க­ளுக்­காக இருந்து மக்­க­ளுக்­காக வாழ்ந்­த­வர்­கள். இந்த மக்­க­ளுக்கு இருக்­கும் வலி­யும் எனக்கு இருக்­கும் வலி­யும் ஒன்­றா­ னவை. நாங்­கள் இடர் துன்­பங்­களைக் கண்டு மக்­களை விட்டு ஓடி­வி­ட­வில்லை. எந்தத் துன்­பத்­தி­லும் மக்­க­ளு­டன் பணி­யாற்­றி­ய­வர்­கள்.

எமது மக்­க­ளின் உணர்­வும் எமது உணர்­வும் ஒன்­று­டன் ஒன்­றாக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வை நாம் இன்று நினை­வு­ப­டுத்­து­ப­வ­தற்கு கார­ணம் நாம் எம்­மு­டைய வலி­களை என்­றும் மறந்து விடக்­கூ­டாது. எமது உற­வு­க­ளை ­யும் ­­தமறந்­து­விடக் கூடாது – என்­றார்.

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி அன்று புதுக்­கு­டி­யி­ருப்பு சுதந்­தி­ர­பு­ரம் பகு­தி­யில் வானூர்­தித் தாக்­கு­த­லில் மற்­றும் எறி­க­ணைத் தாக்­கு­த­லில் படு­கொலை செய்­யப்­பட்ட 33 அப்­பாவி பொது­மக்­க­ளின் 20ஆம் நினைவு நாள் நேற்­றுக் காலை 9.30மணிக்கு வன்­னிக் குறோஸ் தாயக உற­வு­கள் நினை­வேந்­தல் அமைப்­பின் ஏற்­பாட்­டில் வன்­னிக்­கு­றோஸ் தாயக உற­வு­கள் நினை­வேந்­தல் அமைப்­பின் உறுப்­பி­ன­ரும் நிரோ­ஜன் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் தலை­வ­ரு­மான சயந்­தன் தலை­மை­யில் நடை­பெற்­றது.

இந்த நிகழ்­வில் பொதுச்­சு­ட­ரை, இந்­தப் படு­கொ­லை­யில் 4 பிள்­ளைகளை இழந்த பெற்­றோர் ஏற்றி வைத்­த­னர். தொடர்ந்து ஈகச் சு­ட­ரை உயிர்­நீத்­த­வர்­க­ளின் உற­வி­னர்­கள் ஏற்றி வைத்தனர். திரு­வு­ரு­வப்­ப­டத்துக் கான மலர் மாலையை வன்னி மாவட்ட நாடா­ ளு­மன்ற உறுப்­பி­னர் வைத்­திய கலா­நிதி சி.சிவ­ மோ­கன், வட­மா­காண சபை உறுப்­பி­னர் ஆ.புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் அணி­வித்­த­னர். மலர்­வ­ணக்­கத்தை புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை­யின் பிரதி தவி­சா­ளர் ஜென­மே­யந் ஆரம்­பித்து வைத்­தார்.

Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close