குளத்தடியில் மீட்கப்பட்ட முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள்!!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் முஸ்லிம் நபர்கள் இருவரின் தேசிய அடையாள அட்டைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டைகளுக்குரியவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தடிக்குக் குளிக்கச் சென்ற பொது மக்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன.

You might also like