கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளுக்கு – செய­ல­ணி­யில் இட­மில்லை!!

வடக்கு -– கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்ள அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் எந்­த­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார்.

செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக 48பேர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 20பேர் அர­சி­யல்­வா­தி­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­சர் மனோ கணே­சன், நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் அபி­வி­ருத்தி அமைச்­சர் கபீர் ஹசிம், மின்­வலு மற்­றும் புதுப்­பிக்க சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியாம்­பி­லாப்­பிட்­டிய, காணி மற்­றும் நாடா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக்க, சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன,வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச, துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பல்­துறை அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க, கடற்­தொ­ழில் அமைச்­சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா, விவ­சாய அமைச்­சர் மகிந்த அம­ர­வீர, கைத்­தொ­ழில் மற்­றும் வாணிப அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன், விஞ்­ஞான தொழில்­நுட்ப ஆராய்ச்சி, திறன்­கள் அபி­வி­ருத்தி, தொழில் பயிற்சி மற்­றும் கண்டி மர­பு­ரி­மை­கள் அமைச்­சர் சரத் அமு­னு­கம, நக­ரத் திட்­ட­மி­டல் மற்­றும் நீர்­வ­ழங்­கல் அமைச்­சர் ரவூக் ஹக்­கீம், நீர்­பா­சன, நீர்;வழங்­கல், இடர்­மு­கா­மைத்­துவ அமைச்­சர் துமிந்த திசா­நா­யக்க, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர், இரா­ஜாங்க அமைச்­சர் ஏ.எச்.எம்.பௌசி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காதர் மஸ்­தான் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எஞ்­சிய 28பேர் 26 பேர் அரச அதி­கா­ரி­க­ளா­க­வும், இரு­வர் அரச தலை­வ­ரின் பிர­தி­நி­தி­க­ளான ஆளு­நர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16பேரில் ஒரு­வ­ரும் இந்­தச் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்று ஆளும் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அங்­க­ஜன் இரா­ம­நா­தன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

பேச்சு நடத்­தும்

இந்­தச் செய­லணி நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் பேச்சு நடத்­த­வில்லை. செய­லணி தொடர்­பான அர­சி­தழ் வெளி­யா­கிய பின்­னரே இது தொடர்­பில் தமக்­கும் தெரி­ய­வந்­த­தாக கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­டாமை தொடர்­பில், எதிர்­கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் பேச்சு நடத்­து­வார் என்­றும் அந்த வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close