கூட்­ட­மைப்­புக்கு இலஞ்­சம் கொடுத்தது அரசு?

‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இறுதி நேரத்­தில் அரசு வழங்­கிய இலஞ்­சத்­தால் எம்­மால் அர­சுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணைதோல்­வி­ய­டைந்­தது’ –

இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க நேற்­றி­ரவு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘எம்­மு­டன் எதி­ரணி வரி­சை­யில் அமர்ந்­தி­ருக்­கும் மகிந்த ராஜ­பக்­ச­வும், இரா.சம்­பந்­த­னும் முறை­யா­கச் செயற்­பட்­டி­ருந்­தால் அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை வெற்றி பெற்­றி­ருக்­கும். ஆனால், இறு­தி­நே­ரத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அர­சால் இலஞ்­சம் வழங்­கப்­பட்­டது. கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­கா­ரத்­துக்­குத் தீர்வு வழங்­கப்­ப­டும் என தலைமை அமைச்­சர் ரணில் எழுத்­து­மூ­லம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தார். இதை­ய­டுத்து பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க இருந்த கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இறு­தி­யில் பிரே­ர­ணையை எதிர்த்து அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்’ – என்­றார்.

You might also like