கூட்டமைப்புடன் இணையுமாறு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை!!

முன்­னாள் முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் தமிழ்க் கூட்­ட­மைப்பை தன்­னி­டம் வரு­மாறு கூறு­வதை விடுத்து, தனது தவறை உணர்ந்து தமிழ் மக்­க­ளுக்­குத் துரோ­க­மி­ழைக்­கா­மல் பணி­யாற்ற விரும்­பி­னால் அல்­லது தமிழ் மக்­க­ளுக்கு எதை­யா­வது பெற்­றுக் கொடுக்க வேண்­டும் என்று நினைத்­தால் மீண்­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைய வேண்­டும் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறி­த­ரன்.

சிறி­த­ர­னு­டன் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

விக்­னேஸ்­வ­ரன் தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்­வைப் பெற்­றுத் தரு­வார், அவர் அனைத்­தை­யும் செய்­து­மு­டிப்­பார் என்று அவரை முதல்­வ­ரா­கக் கொண்­டு­வ­ர­வில்லை. வட­மா­கா­ணத்­தில் முதல்­வ­ராக வரு­வ­தற்கு பலர் தகு­தி­யா­ன­வர்­க­ளாக இருந்­த­போ­தி­லும் அவ­ரைக் கொண்­டு­வந்­த­மைக்கு முக்­கிய கார­ணம் ஆயு­தப்­போ­ராட்­டத்­து­டன் தொடர்­பில்­லாத ஒரு­வரை பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் முன் கொண்­டு­வந்து எமது ஜன­நா­யக வழியை நிரூ­பிக்க எடுத்த முயற்­சியே. ஆக, தமிழ் மக்­க­ளின் ஒரு பிம்­ப­மா­கவே விக்­னேஸ்­வ­ரனை முதல்­வர் ஆக்­கி­னோம்.

அவ­ரால் வடக்­கில் பாலும் தேனும் ஓட­வைக்க இய­லாது என்று நன்று தெரி­யும். ஆனால் அவர் தான் எந்த வழி­யால் அர­சி­ய­லுக்கு வந்­தாரோ அதை மறந்து தற்­போது செயற்­ப­டு­கின்­றார். தமிழ் மக்­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்­றால் அவர் எம்­மு­டன் இணைந்து பணி­யாற்ற வேண்­டும். இல்­லை­யேல் அவ­ரின் பாதை எத்­த­கை­யது என்­பது அடுத்த தேர்­த­லுக்­குப் பின்­னர் அவ­ருக்­குத் தெரி­ய­வ­ரும் – – என்­றார்.

You might also like